AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி
ஆம்பூர் அருகே சாலையோரம் ஊர்ந்து சென்ற மலைப்பாம்பு! பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்த பொதுமக்கள்!

ஆம்பூர் அருகே சாலையோரம் ஊர்ந்து சென்ற மலைப்பாம்பு! பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்த பொதுமக்கள்!

Sathis S
Sathis S | Published: 31 Oct 2026 07:39 AM IST

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே சாலையோரம் ஊர்ந்து சென்ற மலைப்பாம்பை பொதுமக்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட காட்டுக்கொல்லை பகுதியில் ஆம்பூர் - ஆலாங்காயம் மலைச்சாலை அமைந்துள்ளது. இச்சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் சென்று வருகின்றன.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே சாலையோரம் ஊர்ந்து சென்ற மலைப்பாம்பை பொதுமக்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட காட்டுக்கொல்லை பகுதியில் ஆம்பூர் – ஆலாங்காயம் மலைச்சாலை அமைந்துள்ளது. இச்சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்நிலையில், இன்று அச்சாலையின் ஓரத்தில் மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றுள்ளது. இதனைப் பார்த்த அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள், பாம்பை லாவகமாகப் பிடித்து ஆம்பூர் வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினரிடம் மலைப்பாம்பை ஒப்படைத்தனர். தொடர்ந்து, வனத்துறையினர் அந்த மலைப்பாம்பை விண்ணமங்கலம் காப்புக்காட்டுப் பகுதியில் பாதுகாப்பாக விடுவித்தனர்.

Follow Us