தர்மன் படத்தின் இயக்குநர் அஸ்வத் ரிலீஸ் குறித்து என்ன சொல்லி இருக்கார் தெரியுமா? வைரலாகும் தகவல்
Dharman Movie Shooting Update | தமிழ் சினிமாவில் நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் தர்மன். இந்தப் படத்தின் ரிலீஸ் எப்போது என்பது குறித்து இயக்குநர் பேசிய தகவல்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த் (Rajinikanth). இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் 75 வயதைக் கடந்து சினிமாவில் 50 ஆண்டுகளுக்கு மேலாக பிசியான நாயகனாக நடித்து வருகிறார். அதன்படி இளம் தலைமுறை நடிகர்கள் கூட ஒரு வருடத்திற்கு ஒரு படம் வெளியிடாமல் உள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்த் ஒரு படத்தின் படப்பிடிப்பை முடித்த உடனே அந்தப் படத்தின் ரிலீஸ் ஆவதற்கு முன்பே அடுத்தப் படத்தின் படப்பிடிப்பில் இணைந்து நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இறுதியாக தமிழ் சினிமாவில் வெளியான படம் ஜெயிலர் 2.
இந்தப் படம் திரையரங்குகளில் வெளியானதில் இருந்து தொடர்ந்து விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து இந்தப் படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் அடுத்ததாக தமிழ் சினிமாவில் நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் தர்மன்.




தர்மன் பட இயக்குநர் அஸ்வத் ரிலீஸ் குறித்து என்ன சொல்லி இருக்கார்?
இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதில் இருந்து தொடர்ந்து தர்மன் படம் ரிலீஸ் எப்போது இருக்கும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான தகவலின்படி, இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவிடம், தர்மன் படத்தின் வெளியீட்டுத் திட்டங்கள் குறித்து நடிகரும் யூடியூபருமான சித்ரா லட்சுமணன் அண்மையில் கேட்டறிந்தார். இன்னும் நிறைய பணிகள் மீதமுள்ளதால், பொங்கல் 2027-ல் படத்தை வெளியிடும் திட்டம் ஏதும் இல்லை என்று இயக்குநர் தெளிவுபடுத்தியதாகத் தெரிகிறது. தற்போது இப்படம் 2027-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதவாக்கில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read… பிக்பாஸில் அவினாஷ் – தன்யா சண்டை குறித்து கேள்வி எழுப்பிய விஜய் சேதுபதி… வைரலாகும் வீடியோ!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#Dharman – Director #AshwathMarimuthu was recently contacted by Chitra Lakshmanan regarding the film’s release plans. The director reportedly clarified that they were never planning a Pongal 2027 release, as there is still a lot of work pending. The film is now expected to release around April 2027.
Source – Touring Talkies
— Movies Singapore (@MoviesSingapore) November 2, 2026
Also Read… சீன் பட விழாவில் நடிகர் தனுஷிற்கு நன்றி கூறிய நடிகர் சூர்யா – வைரலாகும் வீடியோ!