AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

234 தொகுதிகளிலும் ஏசி வசதியுடன் இலவச டியூஷன் மையங்கள்? மாணவர்களைக் குறிவைக்கும் தனுஷ்

Dhanush’s 234 Constituency Plan : நடிகர் தனுஷ் அரசியலில் களமிறங்க உள்ளதாகத் தொடர்ந்து பேசப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தின் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், பள்ளி மாணவர்களுக்காக ஏசி வசதியுடன் கூடிய இலவச டியூஷன் மையங்களைத் தொடங்க அவரது நற்பணி இயக்கம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

234 தொகுதிகளிலும் ஏசி வசதியுடன் இலவச டியூஷன் மையங்கள்? மாணவர்களைக் குறிவைக்கும் தனுஷ்
நடிகர் தனுஷ்
Karthikeyan S
Karthikeyan S | Published: 28 Oct 2026 21:51 PM IST

சென்னை, அக்டோபர் 28 : நடிகர் தனுஷ் அரசியலில் களமிறங்க உள்ளதாகத் தொடர்ந்து பேசப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தின் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், பள்ளி மாணவர்களுக்காக ஏசி வசதியுடன் கூடிய இலவச டியூஷன் மையங்களைத் (Tuition Center) தொடங்க அவரது நற்பணி இயக்கம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகர் தனுஷின் அரசியல் வருகையின் முன்னோட்டமாக இது பார்க்கப்படுகிறது.

ஏசியுடன் கூடிய டியூசன் மையம்

தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக, ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு டியூஷன் மையம் அமைக்கப்படவுள்ளது. அனைத்து மையங்களும் ஏசி வசதியுடன் அமைக்கப்படும் எனக் கூறப்படுகிறது. ஒவ்வொரு மையத்திலும் 3 ஆசிரியர்களும் ஒரு உதவியாளரும் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கு மாத ஊதியம் வழங்கப்படும் எனவும் தெரிகிறது. அதன்படி, மாநிலம் முழுவதும் சுமார் 700 ஆசிரியர்களும் 234 உதவியாளர்களும் பணியமர்த்தப்பட வாய்ப்புள்ளது. இதற்கான பணிகள் வரும் 2027 ஜனவரி மாதம் முதல் தொடங்கும் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க : நம்பி விட்ட இடத்தில் கைவரிசை.. வடபழனியில் தோழி வீட்டில் 30 பவுன் நகை அபேஸ்.. புதுச்சேரியில் பதுங்கிய நபர் சிக்கியது எப்படி?

முதல்வர் விஜய்யைத் தொடர்ந்து, நடிகர் தனுஷும் அரசியலுக்கு வரவிருப்பதாகத் தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதை உறுதிப்படுத்தும் வகையிலேயே அவரது சமீபத்திய நடவடிக்கைகள் அமைந்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கடந்த 2026 அக்டோபர் 15 அன்று நடைபெற்ற ரசிகர் மன்ற விழாவில், தனுஷின் ரசிகர் மன்றம் நற்பணி இயக்கமாக மாற்றப்பட்டு, அதற்கான கொடியும் இலச்சினையும் அறிமுகப்படுத்தப்பட்டன. தொகுதி வாரியாக நற்பணி இயக்கத்தை வலுப்படுத்தும் பணிகளும், நிர்வாகிகள் சந்திப்புகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதுதவிர, டெல்லியில் சில முக்கியப் பிரமுகர்களை அவர் சந்தித்ததாகவும், புதிய கட்சிக்கான பெயர் பதிவு செய்யப்பட்டதாகவும் தகவல்கள் உலவுகின்றன. ஆனால், இவை எதுவும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

3,000 பெண்களுக்கு வெள்ளி விளக்கு

இதன் தொடர்ச்சியாக, அண்மையில் நற்பணி இயக்கத்தின் மகளிர் அணி நிர்வாகிகள் சந்திப்பு பிரம்மாண்டமாக நடைபெற்றது. பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 3,000-க்கும் மேற்பட்ட பெண்கள் இதில் பங்கேற்றனர். அவர்களுக்கு, தலா 20 கிராம் எடையுள்ள வெள்ளி விளக்கு பரிசாக வழங்கப்பட்டது. இதற்கிடையே, தனுஷ் அதிமுகவில் இணைந்தால் அவரை இருகரம் கூப்பி வரவேற்போம் என, அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அண்மையில் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தனுஷின் அரசியல் வருகை, டியூஷன் மையத் திட்டம் உள்ளிட்டவை குறித்து, அவரது தரப்பிலிருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

இதையும் படிக்க : தேனி சிறையில் இருந்து தப்பிய 17 கைதிகளும் கைது! மதுரையைச் சேர்ந்த சகோதரர்கள் காவல் நிலையத்தில் சரண்

தற்போதைய முதல்வர் விஜய்யும் கடந்த 2010 ஆம் ஆண்டு காலகட்டத்தில் தனது ரசிகர் மன்றத்தை விஜய் மக்கள் இயக்கம் என மாற்றி உன்னால் முடியும் என்ற கொடியையும் வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து மாவட்டந்தோறும் பல்வேறு நலதிட்ட உதவிகளை வழங்கினார். அதன் ஒரு கட்டமாக தற்போது போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே வென்று முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். அதே வழியைத் தற்போது நடிகர் தனுஷும் கடைபிடிக்கத் தொடங்கியுள்ளார்.

Follow Us