நடிகர் தனுஷ் – இயக்குநர் சிவா கூட்டணியில் உருவாகும் படத்தின் ஷூட்டிங் எப்போது? வைரலாகும் தகவல்
Dhanush and director Shiva movie update | நடிகர் தனுஷ் தற்போது தமிழ் சினிமாவில் பிசியாக நடித்து வரும் நிலையில் அடுத்ததாக இயக்குநர் சிவா உடன் கூட்டணி வைக்கும் படத்தின் படப்பிடிப்பு எப்போது இருக்கும் என்பது குறித்து சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ் (Actor Dhanush). இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து படங்கள் வெளியானாலும் அவ்வபோது பான் இந்திய மொழிப் படங்கள் மற்றும் ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். பெரும்பாலும் சினிமாவில் நாயகன்களாக இருப்பவர்கள் நாயகனாக மட்டுமே நடித்து வருவார்கள் ஒரு சிலர் மட்டுமே சினிமாவில் அனைத்து துறைகளிலும் தங்களது பெயரை பதித்து இருப்பார்கள். அந்த வகையில் நடிகர் தனுஷ் சினிமாவில் இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர், பாடலாசிரியர் மற்றும் பாடகர் என பன்முகத்தன்மை மொண்டவராக வலம் வருகிறார். இவர் நடிக்கும் படங்களில் பெரும்பாலான படங்களை தயாரிப்பது மட்டும் இன்றி அந்தப் படங்களில் பாடல்களை எழுதி பாடவும் செய்வது வழக்கமாக வைத்துள்ளார். சினிமாவில் ஒரு மல்டி டேலண்டட் பர்சனாக வலம் வருகிறார் நடிகர் தனுஷ்.
அந்த வகையில் நடிகர் தனுஷ் நடிப்பில் தொடர்ந்து தமிழ் சினிமாவில் படங்கள் பிசியாக உருவாகி வருகின்றது. முன்னதாக கர படம் திரையரங்குகளில் வெளியான நிலையில் அடுத்ததாக ஓம் படம் வருகின்ற நவம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது.




தனுஷ் – சிவா கூட்டணியில் உருவாகும் படத்தின் ஷூட்டிங் எப்போது?
இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் தற்போது தனது 56-வது படத்திற்காக இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து உடன் இணைந்து பணியாற்றி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் பிசியாக நடைப்பெற்று வருகின்றது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் சிவா உடன் கூட்டணி வைக்கும் தனுஷ் அந்தப் படத்தின் ஷூட்டிங் எப்போது என்பது குறித்து சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.
அதன்படி சினிமா வட்டாரங்களில் வெளியான தகவலின்படி, தனுஷ் தற்போது தமிழரசன் பச்சமுத்து இயக்கும் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் பணியை முடித்த பிறகு, அவர் தனது அடுத்த படத்திற்காக இயக்குநர் சிவவுடன் இணையவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு 2027-ஆம் ஆண்டு ஜனவரி மாத இறுதியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read… Scene: சீன் படத்தின் கதையை சொல்லும்போது சூர்யாவின் ரியாக்ஷன் – இயக்குநர் ஜித்து மாதவன் பேச்சு!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#Dhanush is currently shooting for a film directed by Tamizharasan Pachamuthu. After completing this project, he will be joining hands with director #SIVA for his next film. The shooting is expected to begin in late January 2027. 🔥🎬
#D57 https://t.co/xSrAQPdfr2
— Movie Tamil (@_MovieTamil) October 26, 2026
Also Read… 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் பிரபு தேவா – சிம்ரன் கூட்டணி… வைரலாகும் தகவல்!