மலையாள இயக்குநருடன்.. நடிகர் ஜீவாவின் 49வது படத்தின் ஷூட்டிங் பூஜைகளுடன் தொடக்கம்!
Jiiva 49th Movie Shooting: கோலிவுட் மக்களிடையே சிறந்த நடிகர் மற்றும் தயாரிப்பாளராக பிரபலமானவர் நடிகர் ஜீவா. இவரின் நடிப்பில் தொடர்ந்து தமிழில் புதிய படங்கள் உருவாகிவருகிறது. அந்த விதத்தில் மலையாள இயக்குநரின் இயக்கத்தில் இவர் தற்போது தனது 49வது திரைப்படத்தில் இணைந்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் பூஜைகளுடன் இன்று (27/10/2026) தொடங்கியுள்ளது.
தென்னிந்திய சினிமாவில் மக்கள் கொண்டாடும் நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் ஜீவா (Actor jiiva). இவர் தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் தலைவர் தம்பி தலைமையில் (TTT Movie). இப்படத்தை மலையாள பட இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இயக்கியிருந்தார். இந்த படத்தில் ஜீவா, தம்பிராமையா, இளவரசு என பல்வேறு நடிகர்கள் இணைந்து நடித்திருந்த நிலையில், கடந்த 2026ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதியில் பொங்கல் பண்டிகையோடு வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தின் வரவேற்புக்கு பின் தகப்பன் என்ற படத்தில் ஜீவா நடித்துவந்தார். இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், 2026ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் வெளியாகிறது.
அந்த விதத்தில் மேலும் புதிய திரைப்படத்தில் ஜீவா இணைந்துள்ளார். மலையாள சினிமாவில் நடிகராக நடித்த முஸ்தஃபா என்பவரின் இயக்கத்தில் Jiiva49 திரைப்படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் பூஜைகளுடன் இன்று (27/10/2026) தொடங்கியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: இஞ்சி வெல்லம் படத்தின் ரிலீஸ் எப்போது இருக்கும் தெரியுமா? வைரலாகும் தகவல்
ஜீவாவின் 49வது திரைப்படத்தின் ஷூட்டிங் பூஜை:
நடிகர் ஜீவாவின் இந்த 49வது படத்தை மலையாள நடிகர் முஸ்தஃபா இயக்குகிறார். மேலும் இப்படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் ஜீவாவின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவுள்ளது. இந்த படத்தில் ஜீவா ஹீரோவாக நடிக்க, நடிகைகள் நிமிஷா சஜயன் மற்றும் வாழா 2 பட நடிகை ஏஞ்சல் மரியா இணைந்து நடிக்கவுள்ளார்களாம்.
இதையும் படிங்க: அவன் உங்க கிட்ட மாட்டல டா நீங்கதான் அவன் கிட்ட மாட்டிருக்கீங்க.. மாஸ்டர் பிளான் போட்ட கவ்பாய் டீம் – வைரலாகும் ப்ரோமோ!
இந்த படமானது வித்தியாசமான கதைக்களத்தில் உருவாக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் ஷூட்டிங் பூஜைகளுடன் தொடங்கிய நிலையில், இதுகுறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜீவாவின் 49வது திரைப்படத்தின் ஷூட்டிங் பூஜை தொடர்பாக இணையத்தில் வைரலாகும் பதிவு:
The pooja ceremony of #Jiiva49 has been successfully completed! 🎬
Starring #Jiiva, #NimishaSajayan and #AngelMaria of #VaazhaII fame, the film is jointly backed by Passion Studios and Super Good Studios.
Directed by #Musthafa, who previously helmed #Mura. 👀
Musthafa had earlier announced a project with #SundarC, but there has been no update on its status so far!
— Balaji (@RDBalaji) October 27, 2026
நடிகர் ஜீவாவின் நடிப்பில் இந்த 2026ம் ஆண்டில் 2வது வெளியாக காத்திருக்கும் திரைப்படம் தகப்பன். இந்த படத்தை இயக்குநர் ரா.வெங்கட் இயக்கியுள்ள நிலையில், சிறப்பான கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஜீவாவுடன் ராஜீஷா விஜயன் இணைந்து நடித்துள்ளார். இப்படமானது அப்பா மற்றும் மகனின் கதையாயி மையப்படுத்தி இயக்கப்பட்டுள்ள நிலையில், 2026 டிசம்பர் 4ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. இந்த படத்திற்கு பிறகே ஜீவாவின் 49வது படமும் வெளியாகும் என்பது குறிப்பிடத்தத்க்கது.