டிடிஎஃப் வாசனின் மாஸ்டர் ப்ளான்… சூடு பிடிக்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி!
Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்கி தற்போது 7 வாரங்கள் முடிவடைந்து 8-வது வாரத்தை எட்டியுள்ளது. இந்த வாரம் நடைபெறும் டாஸ்கில் போட்டியாளர்களிடையே போட்டி மிகவும் சூடுபிடித்து உள்ளது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.
தமிழ் சின்னத்திரையில் தற்போது ரசிகர்களிடையே அதிக அளவில் கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சியாக உள்ளது பிக்பாஸ் தமிழ் சீசன் 10 (Bigg Boss Tamil Season 10). இந்த நிகழ்ச்சி தொடங்கி தற்போது 50 நாட்கள் முடிவடைந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகின்றது, அதன்படி பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய போது 19 போட்டியாளர்கள் மற்றும் வைல்கார்ட் எண்ட்ரியாக 5 பேர் என மொத்தம் 24 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் 7 போட்டியாளர்கள் எவிக்டாகி வெளியே சென்றனர். அதனைத் தொடர்ந்து ப்ளாக் பாண்டி மற்றும் ராகவ் என இரண்டு போட்டியாளர்கள் உடல்நலக் குறைவு காரணமாக போட்டியில் இருந்து வெளியேறினர். இதன் காரணமாக தற்போது இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் மொத்தம் 15 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் தற்போது 7 வாரங்கள் முடிவடைந்து 8-வது வாரத்தை எட்டியுள்ளது.
தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் வாரம் வாரம் நாமினேஷன் ப்ராசஸ் நடைபெறும் நிலையில் நேற்று நடைப்பெற்ற ப்ராசசில் வீட்டில் உள்ள 15 போட்டியாளர்களும் இந்த வார நாமினேஷனில் இடம் பிடித்துள்ளனர். மேலும் இந்த வாரத்திற்கான டாஸ்க் குறித்த அறிவிப்பி இன்று வெளியாகி உள்ளது.
டிடிஎஃப் வாசனின் மாஸ்டர் ப்ளான்.. சூடு பிடிக்கும் பிக்பாஸ் டாஸ்க்:
அதன்படி இந்த பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் கௌ பாய்ஸ் மற்றும் மைனிங் மாஃபியாஸ் என இரண்டு அணிகளாக பிரிந்து விளையாடுகின்றனர். இந்தப் போட்டியில் கௌபாய் அணியில் உள்ள டிடிஎஃப் வாசன் திட்டம் தீட்டி மைனிங் மாஃபியாவிற்கு சென்று அங்கு போடும் திட்டங்களை கௌபாய் அணியினருக்கு கூறி வருகிறார். அவரின் இந்த திட்டம் போட்டியை சுவாரஸ்யமாக்கி உள்ளது என்று பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… நான் மனதில் நினைத்த ஆசை தற்போது நிறைவேறியது – நடிகர் சூர்யா
பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Day51 #Promo3 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision https://t.co/LZTq0gDrgS
— Vijay Television (@vijaytelevision) October 27, 2026
Also Read… 700 கோடியை நோக்கி செல்லும் ஜெயிலர் 2 படத்தின் வசூல்? வைரலாகும் தகவல்



