ஜெயிலர் 2 படத்திலிருந்து வெளியானது ரோடி தீம் வீடியோ
Roddy Theme Video From Jailer 2 Movie | நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான படம் ஜெயிலர் 2. இந்தப் படத்தில் இருந்து ரோடி தீம் பாடலின் வீடியோவைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 15-ம் தேதி அக்டோபர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி உள்ள படம் ஜெயிலர் 2. முதல் பாகம் ரசிகர்களிடையே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததைத் தொடர்ந்து இந்த இரண்டாவது பாகத்தை ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த நிலையில் இந்த ஜெயிலர் 2 படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இந்தப் படத்தின் வெளியீட்டிற்கு பிறகு திரையரங்குகளில் படத்தைப் பார்த்த ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் படத்தின் வசூல் ரூபாய் 700 கோடியை நெருங்கி வருவதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் இந்தப் படத்தினை ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடி வரும் நிலையில் படத்தில் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் பான் இந்திய நட்சத்திரங்கள் பலர் நடித்து இருந்தனர். அதில் இந்த பாகத்தில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக அமைந்தது பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷனின் நடிப்புதான்.




ஜெயிலர் 2 படத்திலிருந்து வெளியானது ரோடி தீம் வீடியோ:
இவர் இந்தப் படத்தில் நடித்ததை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் படத்தில் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையில் உருவாகி உள்ள ரோடி தீம் வீடியோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் அந்த வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே அதிக அளவில் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… ஓம் படத்திலிருந்து சாய் பல்லவியின் கிளிம்ஸ் ரிலீஸ் எப்போது? அப்டேட் கொடுத்த இயக்குநர்
ஜெயிலர் 2 படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Let the electrifying #RoddyTheme hit you hard!⚡️It’s out now!
▶️ https://t.co/a4sMrHl1mz
#Jailer2 Industry Mega Blockbuster
@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @iHrithik @vidya_balan @iam_SJSuryah #MithunChakraborty #SurajVenjaramoodu @meramyakrishnan @iYogiBabu @mirnaaofficial @vijaykartikdop @Nirmalcuts @ChethanDsouza @AlwaysJani @KiranDrk @sunilreddy22 #PallaviSingh @valentino_suren @Alagiakoothan #SantoshRaju @kabilanchelliah @kuchirayar73 @RIAZtheboss
— Sun Pictures (@sunpictures) October 27, 2026
Also Read… சாதிகாவும் நீயும் பேசுறது காதலா? டைம்பாஸா? – பிக்பாஸில் முனியம்மாள் கேட்ட கேள்வி… உறைந்துபோன முகேஷ்!