AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஷாருக்கானின் கிங் திரைப்பட ரிலீஸ் எப்போது? புதிய போஸ்டருடன் தேதி குறித்த படக்குழு!

King Movie: பான் இந்திய நட்சத்திர நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் ஷாருக்கான். இவர் இந்தி சினிமாவில் மிகவும் பிரம்மாண்டமாக நடித்துவரும் புதிய திரைப்படம்தான் கிங். இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைந்த நிலையில், இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய போஸ்டரை படக்குழு பகிர்ந்துள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

ஷாருக்கானின் கிங் திரைப்பட ரிலீஸ் எப்போது? புதிய போஸ்டருடன் தேதி குறித்த படக்குழு!
ஷாருக் கான் கிங் திரைப்படம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 27 Oct 2026 12:44 PM IST

பாலிவுட் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக இருந்துவருபவர் ஷாருக்கான் (Actor Shah Rukh Khan). இவரின் நடிப்பில் பான் இந்திய மொழிகளில் திரைப்படங்கள் வெளியாகி மாஸ் மற்றும் சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றுவருகிறது. இவரின் நடிப்பில் இறுதியாக வெளியாகி பிரம்மாண்ட வெற்றியை பெற்ற திரைப்படம் ஜவான் (Jawan Movie). இதை இயக்குநர் அட்லீ (Director Atlee) இயக்கியிருந்த நிலையில், கடந்த 2023ம் ஆண்டில் வெளியாகியிருந்தது. இந்த படத்தின் வெற்றியை அடுத்தாக ஷாருக்கான் தொடர்ந்து புதிய படம் ஒன்றில் நடித்துவந்தார். அதுதான் கிங் (King Movie). இந்த படத்தை இயக்குநர் சித்தார்த் ஆனந்த் (Director Siddharth Anand) இயக்கியுள்ள நிலையில், மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகர் ஷாருக்கான் வித்தியாசமான மற்றும் ஆக்ஷன் வேடத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், 2026ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதியில் வெளியாக காத்திருக்கிறது. அந்த விதத்தில் தற்போது இப்படக்குழு ஸ்பெஷல் போஸ்டரை ஒன்றை வெளியிட்ட நிலையில், இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: அஜித் குமாரின் டேர் டெவில் படத்தின் ஷூட்டிங் எங்கு எப்போது தொடங்குகிறது? – விவரங்கள் இதோ!

ஷாருக்கானின் கிங் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து வெளியாகி எக்ஸ் பதிவு:

ஷாருக்கானின் கிங் திரைப்படத்தின் நடிகர்கள்:

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கானை நடித்துவந்த அதிரடி ஆஸ்கன் படம்தான் கிங். இந்த படத்தை ரெட் சில்லி என்டேர்டைனர் நிறுவனம் தயாரிக்க, தமிழ் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இவரின் இசையில் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையானது சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஷாருக்கான் ஹீரோவாக நடிக்க, நடிகையாக தீபிகா படுகோன் நடித்துள்ளார்.

இதையும் படிங்க: ஜெர்மனியில் அரசன் ரீயூனியன்… இணையத்தில் வைரலாகும் சிலம்பரசன் – ஆண்ட்ரியா போட்டோஸ்!

இவர்களுடன் சுஹானா கான், அபிஷேக் பச்சன், அனில் கபூர், ஜாக்கி ஷ்ரோஃப் , ராகவ் ஜுயல் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் கரீனா கபூர் சிறப்பு வேடத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படமானது பிரம்மாண்டமான கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், 2026ம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 24ம் தேதியில் வெளியாக காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் இரு மாதமே உள்ள நிலையில், அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us