Sai Pallavi: நித்யா ரெட்டி-யாக சாய் பல்லவி… ஓம் படத்திலிருந்து வெளியான கிளிம்ப்ஸ் வீடியோ!
Sai Pallavis Om Glimpse: தென்னிந்திய சினிமா வட்டாரத்தில் நேச்சுரல் பியூட்டி நடிகை என்ற பெருமைக் குரியவர் நடிகை சாய் பல்லவி. இவர் தமிழில் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஓம் படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். அந்த விதத்தில் இவரின் கதாபாத்திர கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு பகிர்ந்துள்ளது.
மலையாள சினிமாவின் மூலம் நடிகையாக நுழைந்து, தற்போது பான் இந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக பேமஸாக இருப்பவர் சாய் பல்லவி (Sai Pallavi). இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் ஏக் தின் (Ek Din). இந்த படத்தை இந்தி இயக்குநர் இயக்கியிருந்த நிலையில், கடந்த மே மாதத்தின் தொடக்கத்தில் உலகமெங்கும் வெளியானது. இந்த படம் இந்தியில் இவருக்கு முதல் திரைப்படமாக அமைந்த நிலையில், ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்திற்கு பின் இந்தியில் ராமாயணா பார்ட் 1 திரைப்படமானது வெளியாக காத்திருக்கிறது. இந்த படங்களின் வரிசையில் தமிழில் இவர் நடித்துவரும் புதிய திரைப்படம்தான் ஓம் (Om Movie). இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் (Rajkumar Periasamy) இயக்கத்தில் இப்படம் உருவாக்க, தனுஷ் (Dhanush) ஹீரோவாக நடிக்கிறார்.
இந்த படத்தின் ஷூட்டிங் இறுதியை எட்டிய நிலையில், வரும் 2026ம் நவம்பர் இறுதியில் வெளியாகிறது. அதை முன்னிட்டு இன்று (26/10/2026) சாய் பல்லவியின் கதாபாத்திர அறிமுக கிலிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.




இதையும் படிங்க: டிஎஸ்பி இன்பராஜ்- ஆக சூர்யா.. சீன் படத்திலிருந்து வெளியான சூர்யாவின் கிளிம்ப்ஸ் வீடியோ!
போலீஸ் அதிகாரி நித்யா ரெட்டியாக சாய் பல்லவி:
நடிகை சாய் பல்லவி தமிழ் சினிமாவில் நாயகியாக தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துவருகிறார். அந்த வகையில் முக்கியமான வேடத்தில் இவர் தமிழில் நடித்துவரும் திரைப்படம்தான் ஓம். இந்த படத்தில் சாய் பல்லவி முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார்.
இதையும் படிங்க: வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்காததற்கு காரணம் என்ன? சிவகார்த்திகேயன் விளக்கம்
இந்த படத்தில் சாய் பல்லவி, நித்யா ரெட்டி என்ற போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார். அது தொடர்பான கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.
ஓம் திரைப்படத்திலிருந்து சாய் பல்லவியின் கிளிம்ப்ஸ் வீடியோ குறித்து வெளியான எக்ஸ் பதிவு:
கம்பீரம் அவள் அடையாளம் 🔥
A force that stands for justice. ❤️🔥
Introducing @Sai_Pallavi92 as Nithya Reddy.
#OM – Worldwide release on November 20.
▶️ https://t.co/vztYYNuJ9c
A @Rajkumar_KP Film.
@dhanushkraja @mammukka @SaiAbhyankkar #NaseeruddinShah @sreeleela14 #Indrans @RTakeStudios @wunderbarfilms @Shra2309 @azy905 @theSreyas @sandy_sashr @vishurams @Ezhil_DOP @kalaivananoffl @iamSandy_Off @kavya_sriram @kabilanchelliah @rajeevan69 @JamRokr @kuchirayar73 @HariSounddesign @Synccinema @WarnerMusicIN @divomusicindia @ManojMaddyMM @RIAZtheboss @parasriazahmed1 @teamaimpr
— Wunderbar Films (@wunderbarfilms) October 26, 2026
இந்த ஓம் திரைப்படத்தில் தனுஷ், சாய் பல்லவி, ஸ்ரீலீலா, இந்திரன்ஸ் மற்றும் மம்முட்டி உள்ளிட்ட பல்வேறு நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தில் இசையமைப்பாளராக சாய் அபயங்கர் இசையமைத்துள்ள நிலையில், இதுவரை இப்படத்திலிருந்து 2 சிங்கிள் வெளியாகியுள்ளது. இந்த படமானது வரும் 2026ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதியில் உலகமெங்கும் வெளியாக காத்திருக்கும் நிலையில், இப்படத்தின் அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகிவரும் என கூறப்படுகிறது.