AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சீன் படத்தைப் பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளை கூறுங்கள்… ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த நடிகர் நஸ்லேன்

Actor Naslen about scene movie | மலையாள சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் நஸ்லேன். இவர் தற்போது தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யா உடன் இணைந்து சீன் படத்தில் நடித்து உள்ளார். இந்தப் பட விழாவில் கலந்துகொண்ட போது நஸ்லேன் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சீன் படத்தைப் பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளை கூறுங்கள்… ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த நடிகர் நஸ்லேன்
நஸ்லேன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 26 Oct 2026 17:34 PM IST

மலையாள சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் நஸ்லேன் (Actor Naslen). இவர் சினிமாவில் நாயகனாக நடிப்பதற்கு முன்பு சின்ன சின்ன பெயரிடப்படாத வேடங்களில் நடித்து வந்தார். தொடர்ந்து அப்படி நடித்து வந்த நடிகர் நஸ்லேன் அதனைத் தொடர்ந்து நாயகன்களின் நண்பராக படங்களில் நடித்து வந்தார். அப்படி நஸ்லேன் நடித்த போதே ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வந்த நஸ்லேன் நாயகனாக நடித்த போது ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற தொடங்கினார். அந்த வகையில் மலையாள சினிமாவில் வெளியான பிரேமலு படம் நஸ்லேனை மலையாள சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி தென்னிந்திய மொழிகளிலும் பிரபலமாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து நஸ்லேன் நடிப்பில் மலையாள சினிமாவில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது.

தொடர்ந்து மலையாள சினிமாவில் பிசியாக நடித்து வரும் நடிகர் நஸ்லேன் தற்போது தமிழ் மொழியில் நேரடியாக அறிமுகம் ஆகிறார். அதன்படி நடிகர் நஸ்லேன் தற்போது சீன் படத்தில் நெகட்டிவ் வேடத்தில் நடித்து உள்ளார். இந்தப் படத்தில் நடிகர் சூர்யா நாயகனாக நடித்து உள்ள நிலையில் நடிகை நஸ்ரியா நசீம் நாயகியாக நடித்து உள்ளர். மேலும் இயக்குநர் ஜித்து மாதவன் இந்தப் படத்தை எழுதி இயக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த நடிகர் நஸ்லேன்:

இந்த நிலையில் படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் நேற்று துபாயில் சீன் படத்தின் புரமோஷன் விழா நடைப்பெற்றது. இந்த விழாவில் நடிகர் நஸ்லேன் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதில் அவர் பேசியதாவது, நான் பலமுறை துபாய்க்கு வந்துள்ளேன், ஆனால் இம்முறை மிகவும் சிறப்பானது.

ஏனெனில் இது எனது முதல் தமிழ்த் திரைப்படம். நான் மிகுந்த உற்சாகத்துடனும் நன்றியுணர்வுடனும் இருக்கிறேன். சூர்யா சார், நஸ்ரியா மற்றும் ஜித்து மாதவன் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகள். இப்படம் நவம்பர் 6-ஆம் தேதி வெளியாகிறது. அனைவரும் படத்தைப் பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளைப் பகிருங்கள். உங்கள் அனைவரிடமிருந்தும் அதே அன்பையும் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன். நன்றி துபாய்.

Also Read… Scene: சீன் படத்தின் கதையை சொல்லும்போது சூர்யாவின் ரியாக்ஷன் – இயக்குநர் ஜித்து மாதவன் பேச்சு!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் பிரபு தேவா – சிம்ரன் கூட்டணி… வைரலாகும் தகவல்!

Follow Us