AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

10 நாட்களில் 215 மி.மீ. மழை பதிவு! நாளை முதல் தமிழகத்தில் மழை குறையும் – பிரதீப் ஜான் கணிப்பு..

Tamil Nadu Rain Forecast: தமிழகக் கடலோரப் பகுதிகளில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பாதை டெல்டா மாவட்டங்களிலிருந்து விலகிச் செல்வதால், அக்டோபர் 27ஆம் தேதி முதல் மழையின் தீவிரம் குறையக்கூடும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் தான் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

10 நாட்களில் 215 மி.மீ. மழை பதிவு! நாளை முதல் தமிழகத்தில் மழை குறையும் – பிரதீப் ஜான் கணிப்பு..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 26 Oct 2026 17:24 PM IST

அக்டோபர் 26, 2026: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 15ஆம் தேதி தொடங்கிய நிலையில், கடந்த 10 நாட்களில் மாநிலம் முழுவதும் சுமார் 215 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாகத் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழைக் காலத்தில் வழக்கமாகக் கிடைக்கும் மழை அளவில் பாதியளவு தற்போது பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்தச் சூழலில், அடுத்த சில நாட்களில் தமிழகத்தில் மழையின் தீவிரம் படிப்படியாகக் குறைய வாய்ப்புள்ளதாகப் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.

அக்டோபர் 27 முதல் மழை குறையும்!


தமிழகக் கடலோரப் பகுதிகளில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பாதை டெல்டா மாவட்டங்களிலிருந்து விலகிச் செல்வதால், அக்டோபர் 27ஆம் தேதி முதல் மழையின் தீவிரம் குறையக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.

நாகப்பட்டினம், திருவாரூர், ராமநாதபுரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கடலூர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில், வடக்கு இலங்கைப் பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: தினமும் கொலைகளை எண்ணும் கொடிய நிலையில் தமிழ்நாடு இருக்கிறது; அக்.31ஆம் தேதி ஆர்ப்பாட்டம் – திமுக தலைவர் ஸ்டாலின்..

சென்னைக்கு ஏன் எதிர்பார்த்த மழை கிடைக்கவில்லை?

வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை சென்னை – புதுச்சேரி கடற்கரையை ஒட்டி நகரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது தெற்குத் திசையில் நகர்ந்தது. இதனால் டெல்டா மாவட்டங்கள் மற்றும் இலங்கையின் சில பகுதிகளில் நல்ல மழை பதிவானது. ஆனால், சென்னையில் எதிர்பார்த்த அளவுக்கு மழை கிடைக்கவில்லை எனப் பிரதீப் ஜான் குறிப்பிட்டுள்ளார். அக்டோபர் 27ஆம் தேதி பிற்பகல் முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழையின் தீவிரம் குறைந்து, வறண்ட வானிலை நிலவ வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.

நவம்பரில் மீண்டும் மழை பெய்யுமா?

தமிழகத்தில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரையிலான வடகிழக்கு பருவமழைக் காலத்தில் சராசரியாக 440 மில்லி மீட்டர் மழை கிடைக்கும் எனக் குறிப்பிடப்படுகிறது. இந்நிலையில், பருவமழை தொடங்கிய முதல் 10 நாட்களிலேயே சுமார் 215 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

மேலும் படிக்க: தீவிரமாகும் வடகிழக்கு பருவமழை.. செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!

தற்போது மழையின் தீவிரம் குறைய வாய்ப்பிருந்தாலும், நவம்பர் மாதத்தில் மீண்டும் மழை பெய்யக்கூடும் எனப் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இதனால், அடுத்த சில நாட்களில் மழை குறைந்தாலும், பருவமழையின் அடுத்தகட்ட நகர்வுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

Follow Us