AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தினமும் கொலைகளை எண்ணும் கொடிய நிலையில் தமிழ்நாடு இருக்கிறது; அக்.31ஆம் தேதி ஆர்ப்பாட்டம் – திமுக தலைவர் ஸ்டாலின்..

MK Stalin On TVK Government: மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், தமிழகத்தில் நடைபெறும் குற்றச் சம்பவங்கள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அதில், “பட்டப்பகலில் வெட்டவெளியில் தொடரும் கொலைகள். சேலத்தில் பகல் நேரத்தில் பொது இடத்திலேயே கொலை நடந்திருக்கிறது. மதுரையில் மாயமான சிறுவன் சடலமாக மீட்கப்பட்டிருக்கிறான். காணாமல் போன சிறுவன் எங்கே என்பதே இப்போது வரை மர்மமாகவே இருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமும் கொலைகளை எண்ணும் கொடிய நிலையில் தமிழ்நாடு இருக்கிறது; அக்.31ஆம் தேதி ஆர்ப்பாட்டம் – திமுக தலைவர் ஸ்டாலின்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 26 Oct 2026 16:36 PM IST

அக்டோபர் 26, 2026: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு வருவதாகக் குற்றம்சாட்டி, வரும் அக்டோபர் 31ஆம் தேதி தமிழகம் முழுவதும் திமுக மகளிர் அணி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தினசரி கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. இதற்கிடையே, குழந்தைகள் மாயமாவது தொடர்பான சம்பவங்களும் அதிகரித்து வருவதாகக் கூறப்படும் நிலையில், சட்டம் ஒழுங்கு விவகாரம் அரசியல் வட்டாரத்தில் மீண்டும் கவனம் பெற்றுள்ளது.

சேலத்தில் பட்டப்பகலில் திமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை!

இந்தச் சூழலில், இன்று (அக்டோபர் 26) சேலம் சூரமங்கலம் பகுதியில் ரியல் எஸ்டேட் அதிபரும் திமுக பிரமுகருமான டேவிட், ஜாமீனில் வெளியே வந்தபோது, மக்கள் நடமாட்டம் மிகுந்த ரயில்வே மேம்பாலத்தில் பட்டப்பகலில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும், மதுரையில் மாயமான சிறுவன் சடலமாக மீட்கப்பட்டதாகவும், மற்றொரு சிறுவன் காணாமல் போன சம்பவத்தில் அவர் எங்கே இருக்கிறார் என்பது குறித்த மர்மம் தொடர்ந்து நீடிப்பதாகவும் மு.க.ஸ்டாலின் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சர் மௌனம் காப்பது ஏன்? – மு.க.ஸ்டாலின் கேள்வி


இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், தமிழகத்தில் நடைபெறும் குற்றச் சம்பவங்கள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அதில், “பட்டப்பகலில் வெட்டவெளியில் தொடரும் கொலைகள். சேலத்தில் பகல் நேரத்தில் பொது இடத்திலேயே கொலை நடந்திருக்கிறது. மதுரையில் மாயமான சிறுவன் சடலமாக மீட்கப்பட்டிருக்கிறான். காணாமல் போன சிறுவன் எங்கே என்பதே இப்போது வரை மர்மமாகவே இருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வீடியோ கேம்கள் மற்றும் திகில் திரைப்படங்களை மிஞ்சும் அளவிற்குத் தமிழகத்தில் குற்றங்கள் பெருகி வருவதாகவும், குற்றவாளிகள் அச்சமின்றிக் குற்றச் செயல்களில் ஈடுபடுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

தினமும் கொலைகள் நடைபெறும் கொடிய நிலை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள மு.க.ஸ்டாலின், சட்டம் ஒழுங்குக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்பதுபோல் முதலமைச்சர் ஏன் மௌனமாக இருக்கிறார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். சட்டம் ஒழுங்கு குறித்து பேசுவதில் வல்லவராக இருப்பதாகக் கூறப்படும் முதலமைச்சர், தற்போது இந்த விவகாரத்தில் ஏன் மௌனம் காக்கிறார் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அக்டோபர் 31-ல் தமிழகம் முழுவதும் போராட்டம்!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளதாகக் கூறப்படும் நிலையை கண்டித்து, வரும் சனிக்கிழமை (அக்டோபர் 31) தமிழகம் முழுவதும் திமுக மகளிர் அணி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

 

Follow Us