AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

15 ஆண்டுகளை நிறைவு செய்தது வேலாயுதம் படம்… இயக்குநர் வெளியிட்ட பதிவு

15 Years Of Velayudham Movie | நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் வேலாயுதம். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு இயக்குநர் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

15 ஆண்டுகளை நிறைவு செய்தது வேலாயுதம் படம்… இயக்குநர் வெளியிட்ட பதிவு
வேலாயுதம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 26 Oct 2026 16:47 PM IST

தென்னிந்திய மொழிகளில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் மோகன் ராஜா (Director Mohan Raja). இவரது இயக்கத்தில் தமிழ் சினிமாவில் வெளியான படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் முன்னதாக திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் தான் வேலாயுதம். கடந்த 2011-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தில் நடிகர் விஜய் நாயகனாக நடித்து இருந்த நிலையில் அவருடன் இணைந்து நடிகர்கள் ஜெனிலியா டிசோசா, ஹன்சிகா மோத்வானி, சந்தானம், சூரி, சரண்யா மோகன், அபிமன்யு சிங், பாண்டியராஜன், வினீத் குமார், எம்.எஸ்.பாஸ்கர்,  இளவரசு, சாயாஜி ஷிண்டே, டி.பி.கஜேந்திரன், வின்சென்ட் அசோகன், காதல் தண்டபாணி, பாண்டி, அஜய், ராகவ், ராஜேந்திரன், ஜுனைத் ஷேக், மணிவண்ணன், வீரசமர், அஞ்சலி தேவி, ஓ.ஏ.கே.சுந்தர், சுவாமிநாதன், யோகி பாபு, கிரேன் மனோகர், கிருஷ்ணமூர்த்தி, ஜார்ஜ் மரியன் மற்றும் லொள்ளு சபா மனோகர் என பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர்.

இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி இசையமைத்து இருந்த நிலையில் படத்தைப் போல பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் இயக்குநர் மோகன் ராஜா தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

14 ஆண்டுகளை நிறைவு செய்தது வேலாயுதம் படம்:

அந்த பதிவு என்ன என்றால் முன்னதாக படம் 13 ஆண்டுகள் நிறைவு செய்த போது தனது எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ பதிவை வெளியிட்டு நடிகர் விஜய்க்கு வாழ்த்தை தெரிவித்து இருந்தார். அதே பதிவை இன்று மீண்டும் ஷேர் செய்து உள்ளார் இயக்குநர் மோகன் ராஜா. அந்தப் பதிவு தற்போது இணையத்தில் தளபதி விஜய் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… நான் மனதில் நினைத்த ஆசை தற்போது நிறைவேறியது – நடிகர் சூர்யா

இயக்குநர் மோகன் ராஜா வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… 700 கோடியை நோக்கி செல்லும் ஜெயிலர் 2 படத்தின் வசூல்? வைரலாகும் தகவல்

Follow Us