AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

என்னை மறந்தாலும் உன்னை மறவாத நெஞ்சோடு நானிருப்பேன்… 23 ஆண்டுகளைக் கடந்தது விஜய் – ஜோதிகா நடிப்பில் வெளியான திருமலை படம்!

23 Years Of Thirumalai Movie | தமிழ் சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடிய ஜோடியாக வலம் வந்தவர்கள் நடிகர்கள் விஜய் மற்றும் ஜோதிகா. இவர்கள் இருவரும் இணைந்து நடித்த திருமலை படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 23 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

என்னை மறந்தாலும் உன்னை மறவாத நெஞ்சோடு நானிருப்பேன்… 23 ஆண்டுகளைக் கடந்தது விஜய் – ஜோதிகா நடிப்பில் வெளியான திருமலை படம்!
திருமலை படம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 24 Oct 2026 17:41 PM IST

தமிழ் சினிமாவில் பல நடிகர் நடிகைகள் இணைந்து ஒன்றாக நடித்து இருந்தாலும் ஒரு சில நடிகர்கள் இணைந்து நடிப்பதை ரசிகர்கள் அதிகம் கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் விஜய் உடன் இணைந்து பல முன்னணி நடிகைகள் நடித்து உள்ளனர். அவர்களில் ஒரு சிலர் மட்டுமே விஜய் உடன் நடிக்கும் போது ரசிகர்கள் அதிக அளவில் கொண்டாடித் தீர்ப்பது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் நடிகை ஜோதிகா நடிகர் தனுஷ் உடன் இணைந்து நடிக்கும் படங்களை ரசிகர்கள் அதிக அளவில் கொண்டாடி வந்ததும் குறிப்பிடத்தக்கது. அதன்படி இவர்களின் நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகி ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெற்ற படங்களில் ஒன்று திருமலை. இந்தப் படத்தினை இயக்குநர் ரமணா எழுதி இயக்கி இருந்தார்.

கடந்த 2003-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது திருமலை படம். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 23 ஆண்டுகளைக் கடந்துள்ளது. இதனை ரசிகர்களும் திரையுலகினரும் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர்கள் விஜய் – ஜோதிகா உடன் இணைந்து பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர்.

23 ஆண்டுகளைக் கடந்தது விஜய் – ஜோதிகா நடிப்பில் வெளியான திருமலை:

அதன்படி நடிகர்கள் மனோஜ் கே. ஜெயன், அவினாஷ், விவேக், ரகுவரன், கௌசல்யா, கருணாஸ், ஃபைவ் ஸ்டார் கிருஷ்ணா, டி.பி.கஜேந்திரன், சாந்தி வில்லியம்ஸ், அஜய் ரத்னம், லாவண்யா, போண்டா மணி, அஞ்சு மகேந்திரன், பசி சத்யா, செல் முருகன், அண்ணாதுரை கண்ணதாசன், கலைராணி, நிழல்கள் ரவி, விஜய் கிருஷ்ணராஜ், சக்தி குமார், கோவை செந்தில், மாஸ்டர் உதயராஜ், ஆர்.சுந்தரமூர்த்தி, நெல்லை சிவா, கோவை பாபு, ராகவா லாரன்ஸ், கிரண் ரத்தோட் மற்றும் அசோக் ராஜா என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.

Also Read… சீன் படத்திலிருந்து வெளியானது நஸ்லேனின் கதாப்பாத்திர அறிமுக வீடியோ

இந்தப் படத்தில் தாய் தந்தை இல்லாமல் இருக்கும் விஜய் ஒரு மெக்கானிக்காக இருக்கிறார். இவருக்கும் பெரிய பணக்கார வீட்டுப் பெண்ணான ஜோதிகாவிற்கும் காதல் ஏற்படுகின்றது. அவர்களின் காதலுக்கு ஜோதிகாவின் அப்பா எதிர்ப்பு தெரிவிக்க இறுதியில் அவர்கள் எப்படி இணைந்தார்கள் என்பதே படத்தின் கதை. இந்தப் படத்தின் 23 ஆண்டு நிறைவை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Also Read… எனது ஆதரவு ப்ளூ டீம்-க்குதான்.. ஜேசனால் ப்ளூ டீம் இடையே ஏற்பட்ட பிரச்சனை!

Follow Us