AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

இலங்கை கடல் பகுதியில் 2 படகுகள் பறிமுதல்.. 7 பேர் அதிரடி கைது.. கடற்படை நடத்திய வேட்டை.. பரபரப்பு பின்னணி!

Beedi Leaf Smuggle 7 Arrested : தூத்துக்குடியில் இருந்து படகு மூலமாக பீடி இலைகளை கடத்திய 7 பேரை இலங்கை கடல் பகுதியில் வைத்து அந்த நாட்டு கடற்படை அதிகாரிகள் கைது செய்தனர். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கை கடல் பகுதியில் 2 படகுகள் பறிமுதல்.. 7 பேர் அதிரடி கைது.. கடற்படை நடத்திய வேட்டை.. பரபரப்பு பின்னணி!
பீடி இலை கடத்தலில் 7 பேர் கைது.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 24 Oct 2026 17:40 PM IST

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் சிலர் தங்களது படகுகளின் இலங்கை கடல் பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அந்தப் பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் அவர்களது படகுகளை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். இதில், பீடி இலைகள் மூட்டை மூட்டைகளாக கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அவர்களிடம் கடற்படை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் தூத்துக்குடி மாவட்டம், குரூஸ்புரத்தை சேர்ந்த நிஷாந்த் ( 40 வயது), ராமநாதபுரம் மாவட்டம், கன்னிராஜபுரம் மங்களா பகுதியை சேர்ந்த சுகிர்தன் ( 44 வயது) மற்றும் திருநெல்வேலி மாவட்டம் கூத்தங்குழியை சேர்ந்த தினேஷ் ( 36 வயது) என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர்களை இலங்கை கடற்படை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர்.

பீடி இலைகள் கடத்தல்- தமிழகத்தை சேர்ந்த 7 பேர் கைது

இதேபோல, மெல்பர் என்பவருக்கு சொந்தமான படகில் பீடி இலை மூட்டைகளுடன் பிடிபட்ட ரோஹித் என்பவரின் படகில் இருந்த தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் அருகே உள்ள சிங்கித்துறையை சேர்ந்த மிக்கேல் ( 30 வயது), தூத்துக்குடி பூபால ராயபுரத்தை சேர்ந்த ஞானி ( 27 வயது) மற்றும் சஞ்சய் ( 23 வயது) ஆகிய 3 பேரையும் இலங்கை கடற்படை கைது செய்தது. தமிழகத்தை சேர்ந்த மொத்தம் 7 பேரை இலங்கை கடற்படை கைது செய்து தங்கள் நாட்டுக்க அழைத்து சென்றது.

மேலும் படிக்க: இலங்கை டூ திருச்சி வந்த விமானம்.. சுங்கத்துறை சோதனையில் சிக்கிய ரூ.36.89 லட்சம் தங்கம்.. சுங்கத்துறை தீவிர விசாரணை!

தூத்துக்குடியில் ஏற்கெனவே பீடி இலைகள் கடத்தல்

அங்கு கடற்படை முகாமில் ஒப்படைக்கப்பட்ட அவர்களிடம் கடற்படை உயர் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் கைதான குடும்பத்தினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக பகுதியில் இருந்து இலங்கைக்கு பீடி இலை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கடத்தப்படும் சம்பவம் அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து பீடி இலைகள் இலங்கைக்கு கடத்த முயற்சி செய்யப்பட்டது.

ரூ.60 லட்சம் மதிப்பிலான பீடி இலைகள் பறிமுதல்.

இதனை, அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கியூ பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டதில், இந்த கடத்தல் சம்பவம் முறியடிக்கப்பட்டது. அத்துடன், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் மற்றும் பீடி இலைகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட 35 கிலோ பீடி இலைகளின் மதிப்பு ரூ. 60 லட்சம் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது, மீண்டும் ஒரு கடத்தல் சம்பவம் அரங்கேறி உள்ளது.

மேலும் படிக்க: இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.60 லட்சம் பீடி இலைகள்… தூத்துக்குடியில் கியூ பிரிவு போலீசார் தடுத்து நிறுத்தம்.. பரபரப்பு பின்னணி

Follow Us