முதல்வர் விஜய்க்கு மத்திய அரசிடம் இருந்து வந்த பாராட்டு.. ஏன்.. எதற்காக.. முழு விவரம்!
Union Minister comments CM vijay : தமிழகத்தில் விமான நிலையத்தில் விமான எரிபொருளுக்கான மதிப்புக் கூட்டு வரியை அரசு குறைத்துள்ள நிலையில், முதல் அமைச்சர் ஜோசப் விஜய்க்கு மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் வணிக பயணிகளுக்கான விமான பயண செலவுகளை குறைப்பதற்காகவும், மாநிலத்துக்குள் விமான நிறுவனங்கள் தங்கள் சேவைகளை விரிவு படுத்துவதை ஊக்குவிக்கவும் தமிழக அரசு மாநிலத்தில் விமான சேவைகளுக்கான திட்டமிடப்பட்ட விமான நிறுவனங்களுக்கு வழங்கப்படும் விமான டர்பைன் எரிபொருள் மீதான மதிப்பு கூட்டு வரியை குறைத்துள்ளது. இதில், சென்னை விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்கான மதிப்பு கூட்டு வரி 29 சதவீதத்தில் இருந்து 16 சதவீதம் ஆகவும், மற்ற விமான நிலையங்களில் 29 சதவீதத்தில் இருந்து 1 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, 40 ஆயிரம் கிலோவுக்கும் குறைவான அதிகபட்சம் புறப்படும் விமானங்களை இயக்கி சென்னையை தவிர்த்து மாநிலத்தில் உள்ள விமான நிலையங்களில் எரிபொருள் நிரப்பும் திட்டமிடப்பட்டது.
நவம்பர் 1- ஆம் தேதி முதல் விமான எரிபொருள் விஏடி வரி குறைப்பு
இதன் மூலம் விமான நிறுவனங்களுக்கு, விமான டர்பைன் எரிபொருள் மீதான மதிப்பு கூட்டு வரி 5 சதவீதத்தில் இருந்து 1 சதவீதம் ஆக அரசு குறைந்துள்ளது. வருகிற நவம்பர் 1- ஆம் தேதி முதல் இந்த வரிக்குறைப்பு அமலுக்கு வர உள்ளது. தமிழக அரசு மதிப்பு கூட்டு வரியை குறைத்துள்ள நிலையில் முதல்வர் விஜய்க்கு மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது: விமான எரிபொருள் மீதான மதிப்பு கூட்டு வரியை தமிழக அரசு குறைக்கும் முடிவுக்கு வரவேற்பு அளிக்கிறேன்.




மேலும் படிக்க: கொடைக்கானல் ஏரியில் நவீன கண்காணிப்பு இயந்திரம்.. குற்றச்செயலை தடுக்க சிறப்பு நடவடிக்கை.. முழு விவரம் உள்ளே!
முதல் அமைச்சர் ஜோசப் விஜய்க்கு மனமார்ந்த நன்றிகள்
இது விமான போக்குவரத்து துறைக்கு ஒரு நல்ல முன்னெடுப்பு ஆகும். இந்த நடவடிக்கையை மேற்கொண்ட முதல் அமைச்சர் ஜோசப் விஜய்க்கு மனமார்ந்த நன்றிகள். விமான பயணத்தை மேலும் மலிவானதாக மாற்றுவதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையேயான இத்தகைய ஒருங்கிணைப்பு மிக மிக முக்கியம் ஆகும். மேலும், விமான பயணத்தை மலிவானதாக மாற்ற மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும்.
Appreciate the Tamil Nadu Government’s decision to reduce VAT on Aviation Turbine Fuel (ATF), a welcome step for the aviation sector. Thank you to Hon’ble Chief Minister Thiru @TVKVijayHQ for this initiative.
Making air travel more affordable requires the Centre and States to work together. Our shared priority must always be the passengers.
— Ram Mohan Naidu Kinjarapu (@RamMNK) October 23, 2026
பொது மக்கள்- விமான பயணிகள் நலனே முக்கியம்
பொது மக்கள் மற்றும் விமான பயணிகளின் நலனே எப்போதும் நமது பொதுவான முன்னுரிமையாக இருத்தல் வேண்டும் என்று மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார். விமான எரிபொருள் ஜிஎஸ்டி வரம்புக்குள் வராது என்பதால் மாநில அரசுகள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு மதிப்பு கூட்டு வரியை நிர்ணயித்துக் கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: வெளுத்து வாங்கிய கனமழை.. வீட்டின் சுவர் விழுந்து தாய்- மகள் பரிதாப பலி.. விருதுநகரில் சோக சம்பவம்!