AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

காப்பகத்தில் இருந்து 2 சிறுமிகள் எஸ்கேப்.. கேமராவில் சிக்கிய அதிர்ச்சி காட்சி.. புழல் போலீசார் விசாரணை!

Puzhal Two Girls Missing : சென்னையில் இலவச காப்பகத்தில் தங்கி இருந்து வந்த மன நல வளர்ச்சி குன்றிய 2 சிறுமிகள் திடீரென மாயமாகினர். இதுதொடர்பாக காப்பக நிர்வாகி அளித்த புகாரின் அடிப்படையில், புழல் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

காப்பகத்தில் இருந்து 2 சிறுமிகள் எஸ்கேப்.. கேமராவில் சிக்கிய அதிர்ச்சி காட்சி.. புழல் போலீசார் விசாரணை!
புழல் காவல் நிலையம்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 24 Oct 2026 14:24 PM IST

சென்னை அருகே அமைந்துள்ள புழல் பகுதி கதிர்வேடு சத்தியமூர்த்தி நகர் பகுதியில் பெண் குழந்தைகளுக்கான இலவச காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தின் நிர்வாகியாக சைலஜா பாஸ்கர் என்பவர் இருந்து வருகிறார். கடந்த 2017- ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இந்த காப்பகத்தில் மூளை வளர்ச்சி குன்றிய பெண் குழந்தைகள் மற்றும் பெற்றோர்களால் கைவிடப்பட்ட பெண் குழந்தைகள் என சுமார் 36 குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், காப்பகத்தில் தங்கி இருந்த சென்னையைச் சேர்ந்த 14 மற்றும் 15 வயது உடைய இரு சிறு சிறுமிகள் திடீரென காணாமல் போனர்.

புழல் காவல் நிலையத்தில் காப்பக நிர்வாகி புகார்

இது குறித்து அந்த காப்பகத்தின் நிர்வாகி சைலஜா பாஸ்கர் மற்றும் ஊழியர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் அந்த சிறுமிகளை கண்டுபிடிக்க முடியவில்லை.  இதனால், அச்சம் அடைந்த காப்பக நிர்வாகி சைலஜா பாஸ்கர் இது குறித்து புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து இரு சிறுமிகளையும் தேடி வருகின்றனர். இதனிடையே, காப்பகம் மற்றும் அந்தப் பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தினர்.

மேலும் படிக்க: கொடைக்கானல் ஏரியில் நவீன கண்காணிப்பு இயந்திரம்.. குற்றச்செயலை தடுக்க சிறப்பு நடவடிக்கை.. முழு விவரம் உள்ளே!

மரத்தின் கிளை வழியாக தப்பிய 2 சிறுமிகள்

அதில், கடந்த அக்டோபர் 21- ஆம் தேதி ( புதன்கிழமை) இரவு இரு சிறுமிகளும் காப்பகத்தின் முதல் மாடியில் இருந்து அருகில் உள்ள மரத்தின் கிளை வழியாக கீழே இறங்கி தப்பி சென்றது தெரியவந்தது. அதன் அடிப்படையில், அந்த சிறுமிகள் எங்கு சென்றனர். அவர்களை யாராவது காப்பகத்தில் இருந்து வெளியே வருமாறு கூறி கடத்தி சென்றனரா என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், விடுதியில் பணிபுரியும் ஊழியர்களிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

மன நலம் பாதித்த இரு சிறுமிகள்

இதனால், விடுதியிலும், அந்தப் பகுதியிலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. அத்துடன், சிறுமிகள் சென்ற பாதைகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் கைப்பற்றி தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதில், இரு சிறுமிகளும் எங்கு சென்றனர் என்பது தொடர்பாக தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே, காப்பகத்தில் இருந்து மாயமான இரு சிறுமிகளும் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க: தூத்துக்குடியில் பரபர சம்பவம்.. வீடு புகுந்து அரிவாள் தாக்குதல்.. கணவன்- மனைவி கொடூர கொலை.. கைதான நபர் பகீர் வாக்குமூலம்!

Follow Us