AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

விரைவில் 5 தொகுதி இடைத்தேர்தல்.. நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் தீவிர ஆலோசனை..

DMK President MK Stalin Holds Strategy Meeting: தமிழகத்தில் தவெக அரசிற்கு எதிராக எதிர்க்கட்சியாகச் செயல்பட்டு வரும் திமுக சார்பில், விரைவில் வரவிருக்கும் ஐந்து சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்களை எதிர்கொள்வது குறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தீவிர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

விரைவில் 5 தொகுதி இடைத்தேர்தல்.. நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் தீவிர ஆலோசனை..
மு.க.ஸ்டாலின்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 24 Oct 2026 14:06 PM IST

சென்னை, அக்.24: தமிழகத்தில் தவெக தலைமையிலான அரசு ஆட்சிப் பொறுப்பேற்றுச் செயல்பட்டு வரும் நிலையில், மாநிலத்தில் விரைவில் வரவிருக்கும் ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஆளுங்கட்சியின் செயல்பாடுகளை எதிர்கொண்டு தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில், பிரதான எதிர்க்கட்சியான திமுக தனது களப் பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டுத் தீவிரப்படுத்தி வருகிறது. வரவிருக்கும் இந்த இடைத்தேர்தல்கள் மாநில அரசியலில் தங்களின் பலத்தை நிரூபிப்பதற்காஔன முக்கிய வாய்ப்பாக அமையும் என்பதால், திமுக தலைமை தனது தேர்தல் வியூகங்களை வகுப்பதில் முழு மூச்சாக ஈடுபட்டுள்ளது.

இதையும் படிக்க: “முதல்வர் விஜய்க்கு தனுஷ் போட்டியே இல்லை!”.. தனுஷின் அரசியல் வருகை குறித்து அமைச்சர் மரிய வில்சன் கொடுத்த விளக்கம்!!

மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டம்:

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்களுடனான அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தவெக அரசின் ஆட்சிக் காலத்தில் வரவிருக்கும் முதல் முக்கிய இடைத்தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்தும், தொகுதி வாரியாக மேற்கொள்ளப்பட வேண்டிய பிரச்சாரப் பணிகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. வாக்காளர்களை நேரில் சென்று சந்திப்பது மற்றும் வாக்குச் சாவடி வாரியாகக் கட்டமைப்புகளை வலுப்படுத்துவது தொடர்பாகத் தலைமைக் கழகம் முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

தொகுதி வாரியாக நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்கள்:

காலியாக உள்ள ஐந்து சட்டமன்றத் தொகுதிகளிலும் தீவிரமாகக் களமிறங்கி வெற்றிபெறும் வகையில் முன்னாள் அமைச்சர்களும் கட்சியின் மூத்த தலைவர்களும் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, திருச்சி கிழக்கு தொகுதிக்கு கே.என்.நேரு மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரும், பெருந்துறை தொகுதிக்கு முத்துசாமியும், கரூர் தொகுதிக்கு செந்தில் பாலாஜியும், அம்பாசமுத்திரம் தொகுதிக்கு ஆவுடையப்பனும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுப் பணிகளைத் தொடங்கியுள்ளனர். மேலும், விராலிமலை தொகுதிக்கு மாவட்டச் செயலாளர்கள் தலைமையிலான குழுவினர் தேர்தல் களப்பணிகளை மேற்பார்வையிட நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிக்க: பொதுமக்கள் கவனத்திற்கு.. மழைக்காலத்தில் பரவும் ஆபத்தான 3 காய்ச்சல்கள்.. மருத்துவர்கள் அறிவுறுத்துவது என்ன?

தேர்தலை எதிர்கொள்ள எதிர்க்கட்சி தீவிர ஆயத்தம்:

எதிர்க்கட்சி வரிசையில் இருந்துகொண்டு ஆளுங்கட்சியான தவெகவை வீழ்த்தும் வகையில், கூட்டணிக் கட்சிகளுடனான ஒருங்கிணைப்பு மற்றும் தொகுதி அளவிலான வாக்கு வங்கி மேலாண்மை குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. தீபாவளிப் பண்டிகைக்குப் பிறகு தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் தேதிகளை அறிவிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருவதற்கு முன்பே அனைத்துப் பூத் கமிட்டி பணிகளையும் முடிக்க திமுக முடிவு செய்துள்ளது. அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டம் தமிழக அரசியல் அரங்கில் பெரும் சுவாரஸ்யத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Follow Us