AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

“திருமாவளவனை முதல்வராக்க இபிஎஸ் உள்ளிட்டோர் முயன்றோம்”.. திடீர் பரபரப்பை கிளப்பிய டிடிவி தினகரன்!!

TTV Dhinakaran Claims Efforts to Make Thirumavalavan as CM: விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை முதலமைச்சராக நியமிக்க எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் முயன்றோம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மேலும், தவெக நடவடிக்கைகளால் எம்எல்ஏக்கள் திருடப்படுவதைத் தடுக்கவே ஆட்சி அமைக்க முயன்றதாகவும், திமுக-அதிமுக கூட்டணி வதறி எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

“திருமாவளவனை முதல்வராக்க இபிஎஸ் உள்ளிட்டோர் முயன்றோம்”.. திடீர் பரபரப்பை கிளப்பிய டிடிவி தினகரன்!!
டிடிவி தினகரன்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 24 Oct 2026 14:34 PM IST

சென்னை, அக்.24: தமிழக அரசியலில் தொடர்ந்து பல்வேறு திருப்பங்களும் விவாதங்களும் அரங்கேறிவரும் சூழலில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்து வெளியிட்ட தகவல்கள் அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. கடந்த கால அரசியல் சூழல்கள் மற்றும் சட்டமன்றத்தில் நடைபெற்ற ஆட்சி மாற்ற முயற்சிகள் குறித்து அவர் வெளிப்படையாகப் பேசியுள்ள கருத்துகள் தற்போது பேசுபொருளாகியுள்ளன. குறிப்பாக, தவெக கட்சியின் ஆட்சிப் பொறுப்பேற்பு மற்றும் அரசியல் நகர்வுகள் குறித்து பல்வேறு கட்சிகளின் நிலைப்பாடுகள் என்னவாக இருந்தது என்பது குறித்து அவர் விரிவான விளக்கங்களை அளித்துள்ளார்.

இதையும் படிக்க: பொதுமக்கள் கவனத்திற்கு.. மழைக்காலத்தில் பரவும் ஆபத்தான 3 காய்ச்சல்கள்.. மருத்துவர்கள் அறிவுறுத்துவது என்ன?

திருமாவை முதல்வராக்க முயன்றோம்:

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனை முதலமைச்சராக பதவியில் அமரச் செய்வதற்காக எதிர்க்கட்சிகள் தரப்பில் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார். எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் இணைந்து இந்த முயற்சியை முன்னெடுத்த போதிலும், அத்தகைய நகர்வுகளுக்கு ஆதரவு அளித்தால் அது பாஜகவை ஆதரிப்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்திவிடும் என்ற அச்சத்தின் காரணமாகக் கம்யூனிஸ்ட் கட்சிகள் இறுதியில் பின்வாங்கின என்று அவர் தெரிவித்தார். மேலும், தாங்கள் எப்போதுமே திமுகவின் ஆதரவைக் கோரவில்லை என்றும், கடந்த மே 8-ஆம் தேதியே இந்த விவரங்களை வெளிப்படையாகத் தான் சுட்டிக்காட்டியிருந்ததாகவும் அவர் தெளிவுபடுத்தினார்.

ஜனநாயகத்தை காக்க ஆட்சி அமைக்க முயன்றோம்:

தவெக தரப்பின் அரசியல் நடவடிக்கைகளால் அதிமுக மற்றும் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் தொடர்ந்து இழுக்கப்படுவதையும், கட்சித் தாவல்கள் மூலம் பலம் குறைக்கப்படுவதையும் தடுத்து நிறுத்துவதற்காகவே தாங்கள் ஆட்சி அமைக்க முயன்றதாகத் தினகரன் நியாயப்படுத்தினார். தவெகவினால் தங்களது சட்டமன்ற உறுப்பினர்கள் திருடப்படுவதைத் தடுத்து, ஜனநாயகத்தைக் காக்கும் நோக்கத்தில்தான் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாற்று ஆட்சி அமைக்கத் திட்டமிடப்பட்டதாக அவர் விளக்கமளித்தார். தவெகவால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத சூழல் ஏற்படும் பட்சத்தில், தங்களுடைய எம்எல்ஏக்களைப் பாதுகாத்துக் கொள்வதே அந்தச் சமயத்தின் உடனடித் தேவையாக இருந்தது என்றும் அவர் கூறினார்.

இதையும் படிக்க: “முதல்வர் விஜய்க்கு தனுஷ் போட்டியே இல்லை!”.. தனுஷின் அரசியல் வருகை குறித்து அமைச்சர் மரிய வில்சன் கொடுத்த விளக்கம்!!

திமுக – அதிமுக கூட்டணி குறித்த பொய் பரப்புரை:

திமுகவும் அதிமுகவும் எதிர்காலத்தில் எப்போதும்கூட ஒன்றாக இணைந்து செயல்பட வாய்ப்பே இல்லை என்றும், அப்படிப்பட்ட தகவல்கள் அனைத்தும் முற்றிலும் அடிப்படையற்ற பொய் பரப்புரைகள் மட்டுமே என்றும் டிடிவி தினகரன் திட்டவட்டமாக மறுத்தார். தேர்தல் களத்தில் திமுகவும் அதிமுகவும் தனித்தனியாகவே வேட்பாளர்களை நிறுத்தி தீவிரமாக போட்டியிட்டன என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், இரண்டு கட்சிகளும் ஒருபோதும் கூட்டு சேரவே முடியாது என்று அடித்துக் கூறினார். எதிர்க்கட்சிகளின் மீது சுமத்தப்படும் தேர்தல் குற்றச்சாட்டுகள் மற்றும் வதகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தினகரன் வெளியிட்டுள்ள இந்தத் தகவல்கள் தமிழக அரசியல் வட்டட்டத்தில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளன.

Follow Us