AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Tamil Nadu Weather forecast: நீலகிரிக்கு இன்று அதிகனமழை ரெட் அலர்ட் – இந்த 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் – வானிலை மையம் தகவல்

Tamil Nadu weather today : நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மிக கனமழை பெய்து வரும் நிலையில் அக்டோபர் 24, 2026 இன்று அதிகனமழைக்கான 'ரெட் அலர்ட்' (Red Alert) எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. மேலும் 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu Weather forecast: நீலகிரிக்கு இன்று அதிகனமழை ரெட் அலர்ட் – இந்த 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் – வானிலை மையம் தகவல்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 24 Oct 2026 15:05 PM IST

சென்னை, அக்டோபர் 24 : நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மிக கனமழையால், பல்வேறு இடங்களில் மண்சரிவுகளும், சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்துப் பாதிப்பும் ஏற்பட்டுள்ள நிலையில், அந்த மாவட்டத்துக்கு அக்டோபர் 24, 2026 இன்றுஅதிகனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ (Red Alert) எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கோவை ஆகிய 9 மாவட்டங்களில் அக்டோபர் 24, 2026 இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால், அவற்றுக்கு ‘ஆரஞ்சு அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 24 மாவட்டங்களில் அக்டோபர் 24, 2026 இன்று கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க : விவசாயிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தமிழக அரசு.. புதிதாக 50,000 இலவச மின் இணைப்புகளை வழங்க அரசாணை வெளியீடு!

அதனைத் தொடர்ந்து அக்டோபர் 25, 2026 நாளை நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், மதுரை, பெரம்பலூர், அரியலூர் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து அக்டோபர் 25, 2026 சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, ஈரோடு, சேலம், நாமக்கல், திருப்பூர், கரூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

நீலகிரியில் மண் சரிவு

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக மிக கனமழை பெய்து வருகிறது. இதனால், மாவட்டத்தின் பல்வேறு சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. சில இடங்களில் மண்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. இதனால் வாகனப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில், நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா அறிவுறுத்தியுள்ளார். குறிப்பாக, மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூர், கோத்தகிரி வழியாக உதகைக்குச் செல்லும் மலைப்பாதைகளில் பயணிப்பதைத் தவிர்க்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படிக்க : மேயர் பிரியாவை யாரும் புறக்கணிக்கவில்லை.. இணைந்துதான் பணியாற்றுகிறோம்” – அமைச்சர் ராஜ்மோகன்

பேரிடர் மீட்புக் குழுக்கள் விரைவு

ரெட் அலர்ட் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேசியப் பேரிடர் மீட்புப் படை, மாநிலப் பேரிடர் மீட்புப் படை ஆகியவற்றின் குழுக்கள் நீலகிரி மாவட்டத்துக்கு விரைந்துள்ளன. மண்சரிவு, வெள்ளம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும் இடங்களில் உடனடியாக மீட்புப் பணிகளை மேற்கொள்ள அவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மலைப்பகுதிகளில் வசிப்போர், மண்சரிவு அபாயம் உள்ள இடங்களிலிருந்து பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதுடன், மரங்கள், மின்கம்பங்கள், நீர்நிலைகள் அருகே செல்லாமல் இருப்பதும் அவசியம். அவசர உதவிக்கு 112 அல்லது மாவட்டப் பேரிடர் கட்டுப்பாட்டு அறை உதவி எண் 1077-ஐத் தொடர்புகொள்ளலாம்.

Follow Us