AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

“யார் வேண்டுமானாலும் வரட்டும், டெல்லியில் போய் உட்காரட்டும்!”.. நடிகர் தனுஷை சூசகமாக தாக்கிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா!!

Minister Aadhav Arjuna Speech about Actor Dhanush: இந்தியாவின் மதச்சார்பற்ற கொள்கையின் வெற்றி தமிழ்நாட்டில் இருந்தே உருவாக்கப்படும் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். மேலும், புதிய நடிகர்களின் அரசியல் பிரவேசம் மற்றும் டெல்லி பயணம் குறித்தும், மதச்சார்பற்ற கூட்டணியின் எதிர்காலம் குறித்தும் அவர் கடுமையாகப் பேசியுள்ளார்.

“யார் வேண்டுமானாலும் வரட்டும், டெல்லியில் போய் உட்காரட்டும்!”.. நடிகர் தனுஷை சூசகமாக தாக்கிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா!!
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 24 Oct 2026 10:51 AM IST

சென்னை, அக்.24: தமிழக அரசியலில் திரைத்துறை பிரபலங்கள் தொடர்ந்து களமிறங்குவதும், புதிய கட்சிகள் தொடங்குவதும் காலங்காலமாக வாடிக்கையான ஒன்றாகவே இருந்து வருகிறது. அந்த வகையில், தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷின் அரசியல் பிரவேசம் குறித்தும், அவரது அடுத்தடுத்த நகர்வுகள் குறித்தும் அரசியல் வட்டாரங்களில் தீவிர விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் நிலவும் புதிய திருப்பங்களை மையமாகக் கொண்டு ஆளுங்கட்சித் தரப்பில் இருந்து தொடர்ச்சியாகக் கடும் எதிர்வினைகளும் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருவது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: பொதுமக்கள் கவனத்திற்கு.. மழைக்காலத்தில் பரவும் ஆபத்தான 3 காய்ச்சல்கள்.. மருத்துவர்கள் அறிவுறுத்துவது என்ன?

ஆதவ் அர்ஜுனாவின் மறைமுகத் தாக்குதல்:

நடிகர் தனுஷின் பெயரைக் குறிப்பிடாமல், அவரது டெல்லி பயணம் மற்றும் அரசியல் நகர்வுகளை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மிகவும் கடுமையாகச் சாடியுள்ளார். “புதியதாக யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கி அரசியலுக்கு வரட்டும்; டெல்லிக்குப் போய் முகாமிட்டுவிட்டு வருகிறார்கள்”.. எந்த நடிகர் பொங்கலுக்கு போய் டெல்லியில் அமர்ந்திருக்கிறார். எந்த நடிகர் புதிதாக டெல்லிக்கு சென்றிருக்கிறார் என அவர்கள் யார் என்பது மக்களுக்கு தெரியும்” என்று அவர் மறைமுகமாகத் தாக்குதல் தொடுத்தார். மேலும், இதுபோன்ற தந்திரமான அரசியல் கணக்கீடுகளோ அல்லது டெல்லி பயணங்களோ தமிழகத்தில் எத்தகைய தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும், மக்களின் ஆதரவு எப்போதும் மதச்சார்பற்ற கொள்கைக்கே உண்டு என்றும் அவர் கூறினார்.

மதச்சார்பற்ற கூட்டணியின் வலிமை:

தமிழகத்தில் மதச்சார்பற்ற கொள்கைகளைக் காப்பாற்றுவதற்காக அமைக்கப்பட்டுள்ள கூட்டணிகள் மிகவும் பலமாக உள்ளதாகவும், கம்யூனிஸ்ட் தோழர்கள் உள்ளிட்ட அனைத்து ஜனநாயக சக்திகளும் இந்தக் கூட்டணியில்தான் தொடர்ந்து பயணிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மதச்சார்பின்மைக்கு எதிராகச் செயல்படுபவர்கள்தான் உண்மையான எதிரிகள் என்றும், எந்தச் சூழலிலும் பொதுமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் சமரசம் செய்துகொள்ளப் போவதில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார். மேலும், கடந்த கால அரசுகளின் நடைமுறைகளைக் கடந்து, சாமானிய மக்களின் நலனை மையமாகக் கொண்டு முதல்வர் தலைமையிலான ஆட்சி வெளிப்படையான நிர்வாகத்தை வழங்கி வருவதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.

முதல்வர் விஜய்க்கு போட்டியே இல்லை:

ஆதவ் அர்ஜுனாவின் விமர்சனத்தைத் தொடர்ந்து, நடிகர் தனுஷின் அரசியல் வருகை குறித்து ஏற்கெனவே கருத்துத் தெரிவித்திருந்த அமைச்சர் மரியவில்சனின் வாதங்களும் தற்போது மீண்டும் பேசப்பட்டு வருகின்றன. தனுஷ் அரசியலுக்கு வருவது குறித்தும், அவர் முதல்வர் விஜய்க்குப் போட்டியாக மாறுவாரா என்பது குறித்தும் எழுப்பப்பட்ட கேள்விக்கு மரியவில்சன் மிகத் தெளிவாகப் பதிலளித்திருந்தார். “முதல்வர் விஜய்க்குத் தனுஷ் மட்டுமல்ல, பாரம்பரியக் கட்சிகளுமே போட்டி கிடையாது; அந்தக் கேள்வியையே நீங்கள் வாபஸ் வாங்கிக் கொள்ளலாம்” என்று அவர் திட்டவட்டமாகக் கூறியிருந்தார். கடந்த காலங்களில் சினிமா பிரபலங்களின் பிரச்சாரங்கள் எந்தவிதமான பெரிய மாற்றங்களையும் ஏற்படுத்தவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், மக்கள் தகுந்த நேரத்தில் சரியான தீர்ப்பை வழங்குவார்கள் என்றும் அழுத்தமாகத் தெரிவித்திருந்தார்.

இதையும் படிக்க: “முதல்வர் விஜய்க்கு தனுஷ் போட்டியே இல்லை!”.. தனுஷின் அரசியல் வருகை குறித்து அமைச்சர் மரிய வில்சன் கொடுத்த விளக்கம்!!

அடிமட்ட அரசியலை நோக்கிய நகர்வுகள்:

சினிமா பின்னணியோடு வரக்கூடிய புதிய நபர்களின் தற்காலிக அரசியல் நகர்வுகள் குறித்துக் கவலைப்படத் தேவையில்லை எனக் குறிப்பிட்டுள்ள அமைச்சர்கள், தங்களின் பிரதான கவனம் 2029 நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில்தான் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். கிராமப்புறங்கள் மற்றும் அடிமட்டத் தொண்டர்களை மையப்படுத்திச் செயல்படுவதன் மூலமே உண்மையான மக்கள் அரசியலை உருவாக்க முடியும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். எவ்வாறாயினும், அடுத்தடுத்து அமைச்சர்கள் நடிகர் தனுஷின் அரசியல் பிரவேகத்தை மையமாகக் கொடுத்துவரும் அதிரடி விமர்சனங்கள் தமிழக அரசியலில் பெரும் அனலைக் கிளப்பியுள்ளன.

Follow Us