நோ பாதுகாப்பு.. நோ விளம்பரம்.. சைலண்டாக ஜெயிலர் 2 படத்தை திரையரங்கில் பார்த்துச்சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
Rajinikanth Theater Visit: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் 172வது திரைப்படமாக திரையரங்குகளில் வெளியாகியிருந்ததுதான் ஜெயிலர் 2. இந்த படமானது வெளியாகி கிட்டத்தட்ட ஒரு வாரத்தை கடந்த நிலையில், சமீபத்தில் ரஜினிகாந்த் இந்த படத்தை திரையரங்கில் நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளார். அது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.
தமிழ் இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் (Director Nelson Dilipkumar) இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Superstar Rajinikanth) நடித்துவந்த பார்ட் 2 திரைப்படம்தான் ஜெயிலர் 2 (Jailer 2). இந்த படமானது மிகவும் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டிருந்த நிலையில், ஜெயிலர் படத்தின் தொடர்ச்சியாக அமைந்திருந்தது. இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்க, அவருடன் ரம்யா கிருஷ்ணன், மிர்னான் மேனன், மோகன்லால் (Mohanlal), சிவராஜ்குமார் (Shivaraj Kumar) உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது பான் இந்திய மொழிகளில் கடந்த 2026ம் ஆனது அக்டோபர் 15ம் தேதியில் வெளியிடப்பட்டிருந்தது. இன்றுடன் (24/10/2026) இப்படமானது வெளியாகி 10 நாட்களை நிறைவு செய்துள்ளது.
அந்த விதத்தில் இதுவரை திரையரங்கில் சென்று ஜெயிலர் 2 படத்தை பார்க்காத ரஜினிகாந்த், நேற்று (23/10/2026) சென்னை பீனிக்ஸ் மாலில் உள்ள திரையரங்கில் அனிருத் மற்றும் நெல்சன் திலீப்குமாருடன் எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் வந்து பார்வையிட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ வெளியாகி தற்போது இணையத்தில் வைரலாகப் பரவிவருகிறது.
இதையும் படிங்க: பிக்கெஸ்ட் ரிபெல் சோல்ஜர்.. இணையத்தில் வைரலாகும் பிரபாஸின் ஃபௌசி படத்தின் கிளிம்ப்ஸ்!




ஜெயிலர் 2 படத்தை திரையரங்கில் ரஜினிகாந்த் பார்வையிட்டதாக வைரலாகிவரும் வீடியோ பதிவு:
இந்த வீடியோவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எந்தவித பாடிகாட்ஸ், எந்தவித விளம்பரங்களும் இல்லாமல் எளிமையாக யறைக்கும் தெரியாமல் ஜெயிலர் 2 படத்தை திரையரங்கில் பார்வையிட சென்றுள்ளார். அவருடன் இசையமைப்பாளர் அனிருத் மற்றும் இயக்குநர் நெல்சன் இருவரும் இணைந்து திரையரங்கில் பார்வையிட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது. தற்போது இந்து தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.
ஜெயிலர் 2 திரைப்படத்தின் மொத்த வசூல் எவ்வளவு:
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 172வது திரைப்படமாக இந்த ஜெயிலர் 2 படமானது உருவாக்கப்பட்ட நிலையில், திரையரங்குகளில் மாஸ் சம்பவம் செய்துவருகிறது. இந்த படமானது சரஸ்வதி பூஜை விடுமுறையை முன்னிட்டு வெளியிடப்பட்ட நிலையில், திரையரங்குகளில் மாஸ் வரவேற்பை பெற்றுவருகிறது.
இதையும் படிங்க: முடிஞ்சத பாத்துக்கோ.. பிக் பாஸில் ப்ளூ டீமின் உணவை கண்முன்னே எடுத்த முனியம்மாள் – வைரலாகும் ப்ரோமோ!
மேலும் வார இறுதியில் உள்ள நிலையில், விரைவில் இப்படமானது ரூ 700 கோடியை நெருங்கவுள்ளதாம். இப்படமாது வெளியாகி இன்றுடன் 10 நாட்களாகியுள்ள நிலையில், இதுவரை உலகமெங்கும் சுமார் ரூ 628.05 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துவருவதாக இணையத்தில் தகவல்கள் வைரலாகிவருகிறது.