AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

முடிஞ்சத பாத்துக்கோ.. பிக் பாஸில் ப்ளூ டீமின் உணவை கண்முன்னே எடுத்த முனியம்மாள் – வைரலாகும் ப்ரோமோ!

Muniyammal Steals Blue Team Food: பிக் பாஸ் தி காமன் மேன் நிகழ்ச்சியின் மூலமாக பிக் பாஸ் 10 போட்டியாளராக நுழைந்தவர் முனியம்மாள். இவர் இந்த நிகழ்ச்சியில் சிறப்பாக விளையாடிவரும் நிலையில், ரெட் அணியில் இருக்கும் அவர், ப்ளூ டீமின் உணவை அவர்களின் கண்முன்னே எடுத்து, அதற்காக அவர் சண்டையிடும் ப்ரோமோ வெளியாகி இணையத்தில் பரவிவருகிறது.

முடிஞ்சத பாத்துக்கோ.. பிக் பாஸில் ப்ளூ டீமின் உணவை கண்முன்னே எடுத்த முனியம்மாள் – வைரலாகும் ப்ரோமோ!
பிக் பாஸ் 10 ப்ரோமோImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 23 Oct 2026 18:02 PM IST

விஜய் தொலைக்காட்சியில் டிஆர்பி ரேட்டிங்கை அதிகரிக்க செய்யும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் முதன்மையாக உள்ளதுதான் பிக் பாஸ் (Bigg Boss). தற்போது இந்த தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10) நிகழ்ச்சியானது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிவருகிறது. இந்த பிக் பாஸ் ஷோவானது கடந்த 2026 செப்டம்பர் 6ம் தேதியில் தொடங்கிய நிலையில், இன்றுடன் (23/10/2026) 47 நாட்களை கடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 19 போட்டியாளர்கள் கலந்துகொண்ட நிலையில், வைல்ட் கார்ட் மற்றும் எவிக்ஷன் போட்டியாளர்களை கடந்து தற்போது மொத்தமாக 16 போட்டியாளர்கள் இந்த போட்டியில் நிலைத்து நிற்கிறார்கள். அந்த விதத்தில் சர்வைவல் டாஸ்க் நடைபெறும் நிலையில், ரெட் டீம் மற்றும் ப்ளூ டீம் இடையே கடுமையான மோதல்கள் இருக்கிறது.

இந்நிலையில் ப்ளூ டீம் தொடர்ந்து வெற்றிபெற்றுவரும் நிலையில், கிச்சனில் கிராசரிஸ் மற்றும் அவர்களுக்கே முழு உரிமை உள்ளது. இதை ரெட் டீம் திருடி ஏற்கனவே சாப்பிட்டிருந்தனர். இந்நிலையில் தனி ஆளாக முனியம்மாள் ப்ளூ டீமின் கண்முன்னே திருடியது தொடர்பான ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: எனது ஆதரவு ப்ளூ டீம்-க்குதான்.. ஜேசனால் ப்ளூ டீம் இடையே ஏற்பட்ட பிரச்சனை!

பிக் பாஸில் ப்ளூ டீமின் கண்முன்னே அவர்களின் உணவை திருடிய முனியம்மாள்:

இந்த ப்ரோமோவில், தன்யா, முனியம்மாள் பக்கத்தில் அமர்ந்து நொறுக்கு தீனியை சாப்பிட்டுக்கொண்டிருந்த நிலையில், இதனால முனியம்மாள் ஆத்திரமடைந்தார். உடனே கிச்சனில் நுழைந்த அவர், அங்கிருந்த உணவு ஒன்றை எடுத்து சாப்பிட ஆரமித்தார். உடனே முகேஷ் அந்த உணவை பிடுங்கிய நிலையில், அவரை தள்ளிக்கொண்டு அந்த உணவை மீண்டும் எடுக்க முனியம்மாள் செய்திருந்தார். இதனால் முனியம்மாள் மீது ப்ளூ டீம் போட்டியாளர்கள் கோபத்தில் இருந்தனர்.

இதையும் படிங்க: என்ன தவறு..? அப்படிப் பார்ப்பது முட்டாள்தனம் – ராஷ்மிகா மந்தனா பேச்சு!

இந்நிலையில் ப்ளூ டீம் கேப்டன் வினோத் பாபு, ஏன் இந்த மாதிரியெல்லாம் பண்ணுறீங்க? என முனியம்மாளிடம் கோபமாக கேள்வி கேட்ட நிலையில், உடனே முனியம்மாள், நான் அப்படிதான் பண்ணுவேன் முடிஞ்சத பாத்துக்கோ என அவர் சவாலாக பேசியுள்ளார். இது தொடர்பான ப்ரோமோ வெளியாகி இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் 47வது நாளின் 3வது ப்ரோமோ குறித்த எக்ஸ் பதிவு:

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது வாரம் வாரமாக மேலும் அதிக வரவேற்பை பெற்றுவருகிறது. முதல் முறையாக கிட்டத்தட்ட 10 கோடி பார்வையாளர்கள் ஜியோஹாட் ஸ்டாரின் லைவ் செய்யப்படும் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியை பார்வையிட்டுள்ளனர். அந்த விதத்தில் இந்த பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது மேலும் சுவாரஸ்யத்தை அதிகப்படுத்தும் என நம்பப்படுகிறது.

Follow Us