AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Yash: ஏன் ராவணனாக நடிக்கிறீர்கள்? என பலர் என்னிடம் கேட்டார்கள் – யாஷ் விளக்கம்!

Yash About Ravana Role: தென்னிந்திய திரைத்துறையில் சிறந்த நடிகர்களில் ஒருவராக மக்களால் அறியப்படுபவர் யாஷ். இவர் ராமாயணா திரைப்படத்தில் ராவணனாக நடித்துள்ளார். இந்த படத்தில் அவர் ராவணனாக நடித்த காரணம் மற்றும் மக்களின் கேள்விக்கு அவர் விளக்கம் கொடுத்துள்ளார். அது குறித்து விவரமாக தெரிந்துகொள்ளலாம்.

Yash: ஏன் ராவணனாக நடிக்கிறீர்கள்? என பலர் என்னிடம் கேட்டார்கள் – யாஷ் விளக்கம்!
ராவணன் கதாபாத்திரம் பற்றி யஷ்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 23 Oct 2026 12:20 PM IST

கன்னட சினிமாவில் நாயகனாக நடித்து தென்னிந்திய சினிமாவில் பிரபலமானவராக இருந்துவந்தவர் ராக்கிங் ஸ்டார் யாஷ் (Rocking Star Yash) . இவர் கன்னட சினிமாவில் பல படங்களில் நாயகனாக நடித்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருக்கிறார். அவ்வாறு நடித்துவந்த இவருக்கு பான் இந்திய அளவுக்கு வரவேற்பை கொடுத்திருந்த திரைப்படம்தான் கேஜிஃஎப் 1 (KGF 1). இதை இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கியிருந்த நிலையில், கடந்த 2018ம் ஆண்டில் வெளியாகி இவருக்கு பான் இந்திய பிரபலத்தை பெற்றுக்கொடுத்தது. இந்த படத்திற்கு பின் கேஜிஃஎப் 2 போன்ற படத்தில் நடித்திருந்தார். இதன் பிறகு இறுதியாக இவரின் நடிப்பில் வெளியான திரைப்படம்தான் டாக்ஸிக் (Toxic). இந்த படமானது கடந்த 2026ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியான நிலையில், எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

இதன் பிறகு இந்தி மொழியில் இவர் நடித்துவந்த திரைப்படம்தான் ராமாயணா பார்ட் 1 (Ramayana Part 1). இந்த படமானது பான் இந்திய மொழி சினிமாவையும் கடந்து ஹாலிவுட் வரை வெளியாகவுள்ளது. இப்படத்தில் நடிகர் யாஷ் ராவணனாக நடித்திருக்கும் நிலையில், அவர் நடித்த காரணத்தை விளக்கியுள்ளார்.

இதையும் படிங்க: 7 நாட்களில் ஜெயிலர் 2 படத்தின் வசூல் இத்தனை கோடிகளா? வெளியானது அதிகாரப்பூர்வ அப்டேட்

ராமாயணா படத்தில் ராவணனாக நடிக்க காரணத்தை விளக்கிய யாஷ்;

சமீபத்தில் நடைபெற்ற ராமாயணா படத்தின் தமிழ் ப்ரோமோஷனில் கலந்துகொண்ட யாஷ், அதில் பேசுகையில், “ராமாயணா படத்தில் நான் ராவணனாக நடித்தபோது, ​​பலர், “ஏன் ராவணனாக நடிக்கிறீர்கள்? ஏனென்றால் அது மிகவும் வெறுக்கப்படும் ஒரு பாத்திரம்” என்று கேட்டார்கள். ஆனால் நான் என்ன நடிக்க விரும்புகிறேன் என்றால், நாம் அனைவரும் வெவ்வேறு பாத்திரங்களில் நடிக்கிறோம், இந்த கதாபாத்திரத்தின் மூலமாக நான் சிவனின் சக்தியை உள்வாங்கிக்கொண்டேன் என கூறியிருந்தார்.

இதையும் படிங்க: ராமாயணா படத்தை அனைவரும் 3டியில் பார்க்க வேண்டும் – சாய் பல்லவி!

மேலும் தமிழ் மக்கள் குறித்து பேசிய யாஷ் தமிழ் மக்கள் எதையும் எளிதில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். “வெற்றியோ தோல்வியோ, தமிழ் ரசிகர்களின் அன்பு மாறாதது. அந்த அன்பையும் மரியாதையையும் பெற என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன். ராமாயணத்திற்கும் அதே அன்பையும் ஆதரவையும் கொடுங்கள், நீங்கள் அதை நிச்சயம் ரசிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன் என தெரிவித்திருந்தார்.

ராமாயணா திரைப்படம் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:

இயக்குனர் நிதேஷ் திவாரியின் இயக்கத்தில் உருவாகியுள்ள ராமாயணா பார்ட் 1 படமானது வரும் 2026ம் ஆண்டு நவம்பர் 5ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. அதை முன்னிட்டு இப்படத்தின் டிக்கெட் முன்பதிவு சிறப்பாக தொடங்கியுள்ளது. இந்த படத்தில் ரன்பீர், யாஷ் மற்றும் சாய் பல்லவி உள்ளிட்ட பல்வேறு நட்சத்திர நடிகர்கள் நடித்திருக்கும் நிலையில், சிறப்பான வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us