Yash: அவர் சீதா தேவியின் சாயலில் இருப்பதாக நான் நினைக்கிறேன்.. சாய் பல்லவி குறித்து யாஷ் பகிர்ந்த விஷயம்!
Yash Praises Sai Pallavi: கன்னட சினிமாவில் மூலமாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை யாஷ். இவர் பாலிவுட்டில் அறிமுகமாகியுள்ள முதல் திரைப்படம்தான் ராமாயணா பார்ட் 1. இப்பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் சமீபத்தில் யாஷ் பேசிய நிலையில், சீதையாக சாய் பல்லவி சரியான பெண்மணி என அவரை புகழ்ந்து பேசியுள்ளார்.
தென்னிந்திய மொழி சினிமாவில் கேஜிஃஎப் (KGF) என்ற திரைப்படத்தின் மூலமாக மக்களிடையே பிரபலமானவர் யாஷ். இவரை ரசிகர்கள் ராக்கிங் ஸ்டார் யாஷ் (Yash) என்று அன்போடு அழைத்துவருகிறார்கள். இவரின் நடிப்பில் கன்னட மொழிகளில் தொடந்து பிரம்மாண்டமான படங்கள் வெளியாகியுள்ளது. இறுதியாக டாக்ஸிக் (Toxic) என்ற படத்திலும் இவர் அதிரடி நாயகனாக நடித்து, வரவேற்பை பெற்றிருந்தார். கன்னட சினிமாவில் தொடர்ந்து நடித்துவந்த இவருக்கு, இந்தியில் முதல் திரைப்படமாக அமைந்திருப்பதுதான் ராமாயணா : பார்ட் 1 (Ramayana: Part 1). இந்த திரைப்படத்தை இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்க, நமித் மல்ஹோத்ரா மற்றும் யாஷின் மாஸ்டர் மைண்ட் தயாரிப்பு நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படத்தில் யாஷ் ராவணனாக நடித்திருக்கும் நிலையில், இவரின் கதாபாத்திரம் குறித்து மக்களிடையே பெரும் எதிர்பார்ப்புகள் இருக்கிறது.
அந்த விதத்தில் சமீபத்தில் இப்படத்தின் தெலுங்கு ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றிருந்த நிலையில், அதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டிருந்தனர். அப்போது மேடையில் பேசிய யாஷ், சாய் பல்லவியின் (Sai Pallavi) பெண்ணியம் மற்றும் தேவி சீதையாக அவர் நடித்தது குறித்து பேசியுள்ளார்.




இதையும் படிங்க: ஹபீபி கம் டூ துபாய்.. சூர்யாவின் சீன் திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி அறிவிப்பு!
நடிகை சாய் பல்லவி குறித்து பெருமையாக பேசிய யாஷ்:
அந்த நிகழ்ச்சியின் மேடையில் பேசிய யாஷ், “சாய் பல்லவி, நான் அவரை பல்லவி என்றுதான் அழைப்பேன். என்னவொரு அற்புதமான பெண், என்னவொரு பெண்மணி. அவரிடமிருந்து ஒருவித பெண்மை ஆற்றல் வெளிப்படுகிறது. அவர் ஒரு விசித்திரமானவள், பல்லவி சீதா தேவியின் சாயலில் இருப்பதாக நான் நினைக்கிறேன்.
இதையும் படிங்க: எங்கள் மூர்த்தி அண்ணன் நமோவுக்கு ஒரு கார் பார்சல்… ஜெயிலர் 2 படம் குறித்து பாராட்டி பேசிய நடிகர் சசிக்குமார்!
அவர் இவ்வளவு பக்தியுள்ளவளாகவும், எப்படிச் சொல்வது? அவரிடமிருந்து ஒருவித ஒளிவட்டம் இருப்பதையும் கண்டு நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன். சீதா தேவியாக இருப்பது எளிதல்ல. எல்லோரும் சொன்னது போல், அந்த ஒளிவட்டத்தையும் பிரகாசத்தையும் நீங்கள் அவரிடம் காண முடியும்” என அதில் புகழ்ந்து பேசியிருந்தார்.
ராமாயணா திரைப்படம் குறித்து நடிகை சாய் பல்லவி வெளியிட்ட பதிவு:
View this post on Instagram
இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் இந்த ராமாயணா திரைப்படமானது மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படமானது இந்திய மொழிகளை கடந்து ஆங்கில மொழியிலும் வெளியாகிறது. இந்த படத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் ரவி துபே போன்ற பல்வேறு நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது 2026ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 5ம் தேதியில் வெளியாக காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.