AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Ramayana: மனிதகுலத்தின் மாபெரும் கதை… இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டிங்கில் இருக்கும் ராமாயணா படத்தின் நியூ ட்ரெய்லர்!

Ramayana New Trailer: 2026ம் ஆண்டில் இந்திய சினிமாவே அதிகம் எதிர்பார்துவந்த மாபெரும் சகாப்தம்தான் ராமாயணா. பாலிவுட் இயக்குநர் நிதேஷ் திவாரியின் இயக்கத்தில் இப்படமானது 2 பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ள நிலையில் ராமாயணா பார்ட் 1, 2026 நவம்பரில் வெளியாகிறது. இப்படத்தின் முதல் ட்ரெய்லர் ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது புதிய ட்ரெய்லரை படக்குழு பகிர்ந்துள்ளது.

Ramayana: மனிதகுலத்தின் மாபெரும் கதை… இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டிங்கில் இருக்கும் ராமாயணா படத்தின் நியூ ட்ரெய்லர்!
ராமாயணா படத்தின் புதிய டிரெய்லர்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 16 Oct 2026 16:16 PM IST

பாலிவுட் சினிமாவிலே மிகவும் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகியுள்ள புராண காவியம்தான் ராமாயணா : பார்ட் 1 (Ramayana :Part 1). இந்த படத்தில் இந்தி இயக்குநர் நிதேஷ் திவாரி (Nitesh Tiwari) இயக்கியுள்ள நிலையில், நமீதா மல்ஹோத்ரா (Namitha Malhotra) இணைந்து தயாரித்துள்ளார். இந்த் படமானது இந்துக்களின் புராண காவியமான ராமாயணத்தின் கதையை மையமாக கொண்டு மிக பிரம்மாண்டமான படைப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் பான் இந்திய நடிகர்கள் பலரும் இணைந்து பணியாற்றியுள்ளனர். நடிகர்கள் ரன்பீர் கபூர் (Ranbir Kapoor) , சாய் பல்லவி (Sai Pallavi), யாஷ் (Yash), ரவி துபே, காஜல் அகர்வால், ராகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திர நடிகர்களும் இணைந்து பணியாற்றியுள்ளனர். இந்த படமானது கிட்டத்தட்ட ரூ 8000 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுளக்க கூறப்படுகிறது. புராண காவியமான இந்த படமானது மக்கள் மத்தியில் பிரம்மாண்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது.

இந்த படமானது 2026ம் ஆண்டு நவம்பர் 5ம் தேதியில் தீபாவளியை முன்னிட்டு வெளியிடப்படுகிறது. ஏற்கனவே இப்படத்தின் முதல் ட்ரெய்லர் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது VFX காட்சிகள் முன்னேற்றமடைந்த புதிய ட்ரெய்லரை படக்குழு பகிர்ந்துள்ளது. இந்த ட்ரெய்லர் தற்போது இணையத்தில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

இதையும் படிங்க: கீர்த்தி சுரேஷின் கைவசம் உள்ள புதிய திரைப்படங்கள் என்னென்ன தெரியுமா?

ராமாயணா திரைப்படத்தின் புதிய தமிழ் ட்ரெய்லர் குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு:

இந்த ராமாயணா படத்தின் புதிய ட்ரெய்லரில் காட்சிகள் ஒவ்வொன்றும் மிகவும் பிரம்மிப்பாகவும், பிரமாண்டமாகவும் அமைந்துள்ளது. இந்த படத்தின் முதல் ட்ரெய்லர் மற்றும் டீசர் வெளியாகியிருந்த சமயத்தில் VFX குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தது. ஆனால் தற்போது வெளியாகியுள்ள புதிய ட்ரெய்லரில் இப்படத்தின் VFX காட்சிகள் மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு காட்சிகளும் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்து என கூறலாம்.

இதையும் படிங்க: பிரிட்டிஷ் காலப் பின்னணியில்… விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகாவின் ரணபாலி திரைப்படம் எப்படி இருக்கு? – விமர்சனங்கள் இதோ

ராமாயணா படத்தின் கதாபாத்திரங்கள்:

இந்த ராமாயணா படத்தில் நடிகர் ரன்பீர் கபூர் ராமனாகவும், சாய் பல்லவி தேவி சீதையாகவும், நடிகர் யாஷ் ராவணனாகவும், ராவணனின் மனைவி மண்டோதரியாக காஜல் அகர்வால். மேலும் நடிகை ராகுல் ப்ரீத் சிங் ராவணனின் தங்கை சூர்பணகையாகவும் மற்றும் லக்ஷ்மணனாக நடிகர் ராவி துபே போன்ற நடிகர்களும் இப்படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படமானது நிச்சயமாக பான் இந்திய வெற்றியை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us