AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ரன்பீர் கபூரின் ராமாயணா படத்திலிருந்து வெளியானது ஜெய் ஜெய் ராம் பாடல்!

Jai Jai Ram song from the Ramayana movie | பாலிவுட் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ரன்பீர் கபூர். இவரது நடிப்பில் தற்போது உருவாகி வரும் ராமாயணா படத்தில் இருந்து ஜெய் ஜெய் ராம் என்ற பாடல் வெளியாகி உள்ளது.

ரன்பீர் கபூரின் ராமாயணா படத்திலிருந்து வெளியானது ஜெய் ஜெய் ராம் பாடல்!
ராமயணாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 14 Sep 2026 12:21 PM IST

இந்தி சினிமாவில் பல ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களிடையே தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருபவர் நடிகர் ரன்பீர் கபூர். இவர் சினிமாவில் உதவி இயக்குநராக தனது பணியைத் தொடங்கி இருந்தாலும் கடந்த 2007-ம் ஆண்டு முதல் நாயகனாக நடிக்கத் தொடங்கினார். தொடர்ந்து இவர் நாயகனாக நடிக்கத் தொடங்கியதில் இருந்து இந்தி சினிமாவில் பிசியான நடிகராக நடித்து வருகிறார். மேலும் இவரது நடிப்பில் இந்தி சினிமாவில் வெளியாகும் படங்கள் இந்தி சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி பான் இந்திய மொழிகளிலும் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் நடிகர் ரன்பீர் கபூர் தேர்வு செய்யும் கதைகள் மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதன்படி முன்னதாக நடிகர் ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியான வேக் அப் சித், ராக்ஸ்டார், சஞ்சு,  என பலப் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் நடிகர் ரன்பீர் கபூர் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான அனிமல் படம் விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் ரன்பீர் கபூர் தற்போது ராமாயணா படத்தில் ராமராக நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராமாயணா படத்திலிருந்து வெளியானது ஜெய் ஜெய் ராம் பாடல்:

இயக்குநர் நித்திஷ் திவாரி இந்த ராமாயணா படத்தினை இயக்கி உள்ள நிலையில் நடிகர் ரன்பீர் சிங் உடன் இணைந்து நடிகர்கள் யஷ், சாய் பல்லவி, ரவி துபே மற்றும் சன்னி தியோல் ஆகியோர் உட்பட பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள நிலையில் படத்தில் இருந்து ஜெய் ஜெய் ராம் என்ற பாடலைப் படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. மேலும் இந்தப் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வருகின்ற நவம்பர் மாதம் 06-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… முனியம்மாவிற்கு பிக்பாஸில் பல மூஞ்சிகள் உள்ளது… எவிக்டான சாவன்யா பேச்சு

ராமாயணா படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… கராத்தே பாபு படத்தில் ரவி மோகன் ஃபர்ஸ்ட் சாய்ஸ் இல்லை – இயக்குநர் கணேஷ் கே பாபு

Follow Us