முனியம்மாவிற்கு பிக்பாஸில் பல மூஞ்சிகள் உள்ளது… எவிக்டான சாவன்யா பேச்சு
Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் பல புது புது விசயங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அப்படி போட்டியாளர்கள் ஒருவரை தேர்வு செய்து வீட்டை விட்டு அனுப்ப முடியும் என்பதன் மூலம் சாவன்யா வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.
பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் பல புது விசயங்களை நிகழ்ச்சி குழு உருவாக்கி உள்ளது. முந்தைய சீசன்களில் இல்லாத பல டாஸ்குகள் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் உள்ளது. அதன்படி முந்தைய சீசன்களில் எப்போதும் நடைபெறாத ஒன்று காமென் மேன் என்ற ஒரு நிகழ்ச்சியை நடத்தில் அதில் தேர்வான பொது மக்களில் இருந்து மூன்று நபர்களை இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் முன்பு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இருந்து உடல் நலக்குறைவு காரணமாக நடிகர் ப்ளாக் பாண்டி வெளியேறினார். அதனைத் தொடர்ந்து காமென் மேன் போட்டியில் கலந்துகொண்ட மணிவண்ணன் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் வைல்கார்ட் போட்டியாளராக என்ட்ரி கொடுத்தார்.
அதனைத் தொடர்ந்து மீண்டும் 19 போட்டியாளர்கள் ஆனது. இந்த நிலையில் கடந்த வாரம் நாமினேஷனில் தேர்வான போட்டியாளர்களில் இருந்து ஒருவரை வீட்டில் உள்ள மற்ற போட்டியாளர்கள் வெளியே அனுப்ப ஒரு டாஸ்க் ஒன்று நடைப்பெற்றது. அதில் மற்ற போட்டியாளரில் பெரும்பான்மையானோர் சாவன்யா வேலுவை தேர்வு செய்து வீட்டில் இருந்து வெளியே அனுப்பினர்.




முனியம்மாவிற்கு பிக்பாஸில் பல மூஞ்சிகள் உள்ளது:
இந்த நிலையில் இன்றைய எபிசோடில் விஜய் சேதுபதி முன்பு இருந்து சாவன்யா வேலு வீட்டில் உள்ள மற்ற போட்டியாளர்கள் எப்படி என்ன என்பது குறித்தும் தன்னை வெளியே அனுப்ப என்ன காரணம் என்றும் போட்டியாளர்களிடையே கேள்வி எழுப்புகிறார். அப்போது முனியம்மா குறித்து பேசுகையில் முனியம்மாவிற்கு பல முகங்கள் உள்ளது என்று வெளிப்படையாக பேசினார். மேலும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்கும் பலர் முனியம்மாவின் செயல்கள் எரிச்சல் மூட்டும் விதமாக உள்ளது என்பதையும் வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Also Read… நானியின் தி பாரடைஸ் படத்தின் ட்ரெய்லர் வெளியாகாதா? வைரலாகும் தகவல்
பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Day7 #Promo2 of #BiggBossTamil
Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision pic.twitter.com/ZjTQJWw6cf
— Vijay Television (@vijaytelevision) September 13, 2026
Also Read… துருவ் விக்ரமின் 4வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் எப்போது? – வெளியான அப்டேட் இதோ!