ஓடிடியில் வெளியான பத்தா படத்தை கொண்டாடும் ரசிகர்கள்… என்ன காரணம் தெரியுமா?
Baththa Movie OTT Review Here | நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியன படம் பத்தா. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து தற்போது ஓடிடியிலும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது.
தமிழ் சினிமாவில் தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கி தற்போது பான் இந்திய மொழிகளில் பிரபல நடிகராக வலம் வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi). தொடர்ந்து தமிழ் மொழியில் அதிக அளவில் படங்களில் நடித்து வருகிறார். தொடர்ந்து தமிழ் மொழியில் பிசியான நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் சேதுபதி அவ்வபோது மற்ற மொழிகளிலும் படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் இந்த 2026-ம் ஆண்டில் இரண்டாவதாக திரையரங்குகளில் வெளியானது பத்தா படம். இந்தப் படத்தை இயக்குநர் பாலாஜி தரணிதரன் எழுதி இயக்கி உள்ளார். முன்னதாக இவர்களின் கூட்டணியில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். அதன்படி நடிகை லிஜோமோல் ஜோஷ் நாயகியாக நடித்து உள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் அர்ஜுன் சிதம்பரம், ஹரி கிருஷ்ணன், அஜய் கோஷ், விஷ்ணு கோவிந்தன், கவின் ஜெய் பாபு, பாலமுருகன், சாந்தி பாலச்சந்திரன், மருது பாண்டியன், இந்துமதி மணிகண்டன், தீபா வெங்கட், குழந்தை சஹஸ்ர ஸ்ரீ, மாஸ்டர் சாய் பிருத்விராஜ், டான் கேனின் ராவ், விஷ்ருதா, ஜே. துரை ராஜ், ரேகா குமணன் மற்றும் ரம்யா பாண்டியன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர்.
ஓடிடியில் வெளியான பத்தா படத்தை கொண்டாடும் ரசிகர்கள்:
இந்தப் படம் காமெடி ட்ராமா பாணியில் உருவாகி உள்ளது. இந்தப் படம் 80களில் நடைபெறுவது போல காட்டப்பட்டுள்ளது. அதன்படி படத்தில் பத்தா பெரிய டானாக இருக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி. இவருக்கு அந்த ஊரில் இருக்கும் அனைவரும் பயப்படுவார்கள். அந்த ஊரில் இருக்கும் குழந்தைகள் பள்ளியில் பத்தா ஒரு பெரிய டான் என்பது குறித்து பேசுவது அங்கு உள்ள சிறுவன் சபரியை அதிக அளவில் பயமுடுத்துகிறது.




Also Read… Adhik Ravichandran: டேர் டெவில் நல்ல படமா அமையனும்.. அப்போதுதான் – ஆதிக் ரவிச்சந்திரன் பேச்சு!
இந்த நிலையில் கோடை விடுமுறையில் தனது விளையாட்டு பொருளை பள்ளியில் இருந்து எடுப்பதற்காக அங்கு சிறுவன் சபரி செல்கிறான். அப்போது பாத்ரூம் செல்லும் அவர் திரும்பி வெளியே வரும்போது கதவை மூடுகிறான். அங்கு விஜய் சேதுபதி மாட்டிக்கொள்ள அடுத்து என்ன நடக்கிறது என்பதே படத்தின் கதை. எவ்வளவு பெரிய டானாக இருந்தாலும் 4 செவருக்குள் அடைப்பட்டு கிடக்கும் போது வாழ்க்கையை புரிந்துகொள்கிறார். இதன் காரணமாக இந்தப் படம் தற்போது ரசிகர்களால் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.
Also Read… சாப்பாட்டுக்குதான் மா பிரச்சனையே.. பிக் பாஸில் தன்யாவால் கடுப்பான லக்ஷ்மி பிரியா!