AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கிருஷ்ணகிரியில் பயங்கரம்… தொழிற்சாலை கட்டடம் இடிந்து விபத்து.. இடிபாடில் சிக்கி 3 பேர் பலி!

Hosur Factory Building Collapse : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொழிற்சாலை கட்டிடம் கட்டும் பணியின் போது முதல் தளம் சரிந்து விழுந்ததில் 3 கட்டிட தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் நடந்து வருகிறது.

கிருஷ்ணகிரியில் பயங்கரம்… தொழிற்சாலை கட்டடம் இடிந்து விபத்து.. இடிபாடில் சிக்கி 3 பேர் பலி!
இடிந்து விழுந்த தொழிற்சாலை.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 05 Nov 2026 17:46 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியில் உள்ள வேடர் பள்ளியில் பாலாஜி டூல்ஸ் என்ற தனியார் தொழிற்சாலை கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதில், இன்று வியாழக்கிழமை வழக்கம் போல பணிகள் தொடங்கி நடைபெற்ற நிலையில், தொழிற்சாலை நுழைவு வாயில் பகுதியில் ஆர்ச் அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இதற்காக, கான்கிரீட் கலவை போடப்பட்டது. அப்போது, யாரும் எதிர்பாராத விதமாக திடீரென ஆர்ச் சரிந்து விழுந்தது. அத்துடன், தொழிற்சாலையில் முதல் தளமும் சரிந்து விழுந்தது. இதில், சுமார் 8 தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டதாக தெரிகிறது.

இடிபாட்டில் சிக்கி 3 தொழிலாளர்கள் பலி

இந்த சத்தம் கேட்டு சக தொழிலாளர்கள் மற்றும் அக்கம், பக்கத்தில் உள்ள பொதுமக்கள் அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக சிப்காட் காவல் நிலையத்துக்கும், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில், 3 தொழிலாளர்கள் அடுத்தடுத்து மயங்கிய நிலையில் மீட்கப்பட்டனர்.

மேலும் படிக்க: 2 பெண்களுக்கு பாலியல் தொல்லை.. காத்திருப்போர் பட்டியலுக்கு தூக்கியடிக்கப்பட்ட இன்ஸ்பெக்டர்.. நெல்லை சரக டிஐஜி அதிரடி!

மீட்பு பணியில் தீயணைப்பு படை வீரர்கள்

அவர்களை பரிசோதித்த போது, அவர்கள் மூவரும் உயிரிழந்திருப்பது தெரியவந்தது. தொடர்ந்து, அவர்களது சடலம் உடல் கூறாய்வு மேற்கொள்வதற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அத்துடன் கட்டட இடிபாடுகளுக்குள் 5 பேர் சிக்கி இருப்பதாவகவும், அவர்களை மீட்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அத்துடன், கட்டிடத்துக்கு வெளியே பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த சுமார் 15 தொழிலாளர்கள் காயம் அடைந்தததாக கூறப்படுகிறது. அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்தில் உயிரிழந்தவர்கள் அடையாளம்

தொடர்ந்து, அந்த இடத்தில் மீட்பு பணிகளில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக சிப்காட் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டதில், உயிரிழந்தது சீனு, குமரேசன் மற்றும் மைக்கேல் என்பது தெரியவந்துள்ளது. இந்த விபத்து நடந்த இடத்துக்கு இருபுறமும் வேறு கட்டிடங்கள் உள்ளன. இந்த தொழிற்சாலை புதிதாக கட்டப்படுவதால் அதன் அருகே ட்ரான்ஸ்பார்மர் இருந்தது. இந்த விபத்து காரணமாக பாதுகாப்பு கருதி மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க: சட்டம் அனைவருக்கும் சமம்! முதல்வர் விஜய்- ஜெகன்மோகன் ரெட்டி பேனர் அகற்றம்.. சென்னை மாநகராட்சி நடவடிக்கை!

Follow Us