AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அம்பை இடைத்தேர்தலில் சீமானுக்கு ஆதரவு கிடையாது – டி.கே.எஸ் இளங்கோவன் திட்டவட்டம்..

TKS Elangovan: சீமான் திராவிட இயக்கத்துக்கு எதிராகக் கட்சியைத் தொடங்கி திமுகவைத் தொடர்ந்து விமர்சித்து வந்தவர் என்பதால், அம்பாசமுத்திரத்தில் அவருக்கு ஆதரவளிக்கும் எண்ணம் திமுகவுக்கு இல்லை என்றும், தங்களுக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும்போது அவரை ஏன் ஆதரிக்க வேண்டும் என்றும் டி.கே. இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அம்பை இடைத்தேர்தலில் சீமானுக்கு ஆதரவு கிடையாது – டி.கே.எஸ் இளங்கோவன் திட்டவட்டம்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 05 Nov 2026 17:50 PM IST

நவம்பர் 5, 2026: தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு ஆதரவு அளிக்கும் எண்ணம் திமுகவுக்கு இல்லை என்று அக்கட்சியின் செய்தித் தொடர்புக் குழுத் தலைவர் டி.கே. இளங்கோவன் தெரிவித்துள்ளார். மேலும், ஐந்து தொகுதிகளிலும் திமுக நேரடியாகப் போட்டியிட்டு வெற்றி பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஐந்து தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தத் தயாராகும் தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை, கரூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் காலியாக உள்ளன. இந்தத் தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெறக்கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கான முன்னேற்பாடுகளைத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

மேலும் படிக்க: சட்டம் அனைவருக்கும் சமம்! முதல்வர் விஜய்- ஜெகன்மோகன் ரெட்டி பேனர் அகற்றம்.. சென்னை மாநகராட்சி நடவடிக்கை!

ஏற்கெனவே மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு அக்டோபர் மாதம் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்ற நிலையில், திமுக இரண்டாவது இடத்தையும், அதிமுக மூன்றாவது இடத்தையும் பிடித்தது.

அம்பாசமுத்திரத்தில் போட்டியிடும் சீமான்..

இதற்கிடையே, அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தனக்கு ஆதரவு அளித்தால் ஏற்றுக்கொள்வேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மேலும், அத்தொகுதியில் தானே போட்டியிடப்போவதாகவும் அறிவித்துள்ளார்.

திமுக, அதிமுக ஆதரவை ஏற்றுக்கொள்வீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “பசியோடு இருப்பவனுக்கு பிரியாணி கொடுத்தால் வேண்டாம் என்று சொல்ல அவன் என்ன பைத்தியக்காரனா? அவர்கள் ஆதரவு அளித்தால் நிச்சயமாக ஏற்றுக்கொள்வேன்” எனப் பதிலளித்தார். அதேசமயம், இதனை தேர்தல் ஆதரவாக மட்டுமே பார்க்க வேண்டும் என்றும், கூட்டணியாகக் கருதக்கூடாது என்றும் விளக்கமளித்தார்.

சீமானுக்கு ஆதரவு இல்லை.. டி.கே. இளங்கோவன் திட்டவட்டம்!

திமுக மற்றும் அதிமுகவை தொடர்ந்து விமர்சித்து வந்த சீமான், தற்போது இரு கட்சிகளிடமும் ஆதரவு கோரியிருப்பது அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து திமுக செய்தித் தொடர்புக் குழுத் தலைவர் டி.கே. இளங்கோவன் கூறுகையில், மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்களில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில்தான் திமுக வெற்றியைத் தவறவிட்டதாகக் குறிப்பிட்டார். மேலும், ஐந்து தொகுதிகளிலும் திமுக நேரடியாகப் போட்டியிட்டு வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருப்பதாகத் தெரிவித்தார்.

மேலும் படிக்க: தொப்புள் கொடியுடன் இருந்த பெண் குழந்தை.. முதலமைச்சர் விஜய் வீட்டின் அருகே வீசிச்சென்ற பெண்..

தொடர்ந்து பேசிய அவர், தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் முதலமைச்சர் விஜய்க்கு நிர்வாகத் திறமை இல்லை என்பது மக்களுக்குத் தெரியவந்துள்ளதாகவும், விலைவாசியைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் விமர்சித்தார்.

சீமான் திராவிட இயக்கத்துக்கு எதிராகக் கட்சியைத் தொடங்கி திமுகவைத் தொடர்ந்து விமர்சித்து வந்தவர் என்பதால், அம்பாசமுத்திரத்தில் அவருக்கு ஆதரவளிக்கும் எண்ணம் திமுகவுக்கு இல்லை என்றும், தங்களுக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும்போது அவரை ஏன் ஆதரிக்க வேண்டும் என்றும் டி.கே. இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

Follow Us