AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சட்டம் அனைவருக்கும் சமம்! முதல்வர் விஜய்- ஜெகன்மோகன் ரெட்டி பேனர் அகற்றம்.. சென்னை மாநகராட்சி நடவடிக்கை!

CM Vijay Banner Removed : சென்னையில் முதல் அமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோரின் பிரம்மாண்ட பேனர்கள் பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாக கூறி மாநகராட்சி ஊழியர்கள் அதிரடியாக அகற்றினர் .

சட்டம் அனைவருக்கும் சமம்! முதல்வர் விஜய்- ஜெகன்மோகன் ரெட்டி பேனர் அகற்றம்.. சென்னை மாநகராட்சி நடவடிக்கை!
முதல்வர் விஜய் பேனர் அகற்றம்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 05 Nov 2026 16:40 PM IST

சென்னை எம். ஆர். சி. நகரில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் மற்றும் ஆந்திர பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல் அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோர்களை வரவேற்று வைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட பேனர்களை பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாக கூறி சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். ஆந்திர மாநில முன்னாள் முதல் அமைச்சரும், ஒ. எஸ். ராஜேந்திரன் ராஜசேகர ரெட்டியின் குடும்ப உறுப்பினரான அணில் ரெட்டியின் மகள் திருமணம் நவம்பர் 3- ஆம் தேதி முதல் 6- ஆம் தேதி வரை சென்னை எம். ஆர். சி. நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஆந்திர பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல் அமைச்சரும், ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திராவில் இருந்து சென்னை வருகை தந்துள்ளார். இதில், தமிழக முதல் அமைச்சர் ஜோசப் விஜய்யும் பங்கேற்க உள்ளார்.

முதல்வர் – முன்னாள் முதல்வரை வரவேற்று பிரம்மாண்ட பேனர்

இதற்காக இருவரையும் வரவேற்று எம். ஆர். சி. நகர் பகுதியில் பிரம்மாண்ட பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. தமிழக முதல்வர் விஜய், ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோரின் திரு உருவ பேனர்கள் பெரிதளவில் வைக்கப்பட்டிருந்தது. இந்த கட்டவுட்டுகள் அனைத்தும் சுமார் 10 அடிக்கு மேல் உயரமானதாகும். தற்போது, இந்த பேனர்கள் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக இருந்ததாக தெரிகிறது. இது தொடர்பாக புகார் எழுந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க: தவெகவின் தற்குறி நிர்வாகமே வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்.. குதிரை பேர குற்றச்சாட்டில் நீலி கண்ணீர் வடிக்க வெட்கமா இல்லையா.. பொங்கிய டிடிவி தினகரன்!

முதல்வர் விஜய் – ஜெகன் மோகன் ரெட்டி பேனர் அகற்றம்

இந்த நிலையில், சென்னை மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்ற புகார்கள் அடிப்படையில் மாநகராட்சி அதிகாரிகள் தலைமையில் எம். ஆர். சி. நகரில் வைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட பேனர்களை மாநகராட்சி ஊழியர்கள் அதிரடியாக அகற்றினர். முதல்வர் மற்றும் முன்னாள் முதல்வர் பேனராக இருந்தாலும் உரிய அனுமதி பெறாமல் வைக்கப்பட்டிருப்பதாலும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருப்பதாலும் அதனை அகற்றுவதாக மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது இடத்தில் பேனர் கலாசாரத்துக்கு உயர்நீதிமன்றம் தடை

பொதுவாக பொதுமக்கள் பயன்படுத்தும் பொது இடங்களில் இடையூறு ஏற்படுத்தும் வகையில் கட் அவுட் அமைக்க கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால், இந்த உத்தரவுகளை மீறி சில இடங்களில் இது போன்று இடையூறு ஏற்படுத்தும் வகையில் கட் அவுட்டுகள் அமைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாக குழு விவகாரம்.. உயர்நீதி மன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் வைத்த செக்!

Follow Us