சேலத்தில் 3 டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை – பணியாளர்கள் போராட்டம்; ஏமாற்றத்துடன் காத்திருந்த மதுப்பிரியர்கள்!
TASMAC Closure: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக டாஸ்மாக் பணியாளர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படுவதாகக் கூறி, காலி பாட்டில்களைப் பெறுவதற்குத் தனியாகப் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக டாஸ்மாக் பணியாளர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படுவதாகக் கூறி, காலி பாட்டில்களைப் பெறுவதற்குத் தனியாகப் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏற்கனவே மது விற்பனையின்போது பாட்டில்களை ஸ்கேன் செய்து ஸ்டிக்கர் ஒட்டும் பணியுடன், திரும்பப் பெறும்போதும் ஸ்கேன் செய்ய வேண்டியுள்ளதால் பணிச்சுமை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர். இதனை எதிர்த்து இன்று சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் உள்ள 3 டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை. மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் கடைகள் திறக்கப்படாததால் மதுப்பிரியர்கள் ஏமாற்றத்துடன் காத்திருந்தனர். தனியாகப் பணியாளர்களை நியமிக்கும் வரை போராட்டம் தொடரும் என ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
