AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி
திருச்சியில் உணவு வீதி.. கெட்டுப்போன உணவுகள் விற்றால் நடவடிக்கை.. அமைச்சர் எச்சரிக்கை!

திருச்சியில் உணவு வீதி.. கெட்டுப்போன உணவுகள் விற்றால் நடவடிக்கை.. அமைச்சர் எச்சரிக்கை!

Deepan
Deepan | Updated On: 02 Nov 2026 10:12 AM IST

திருச்சி காஜாமலை ரேஸ்கோர்ஸ் சாலையில், தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள "ஆரோக்கியமான மற்றும் சுகாதாரமான உணவகங்களின் வீதி" (Food Street) திறப்பு விழா இன்று நடைபெற்றது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் ஆகியோர் கலந்துகொண்டு, உணவு வீதியை தொடங்கி வைத்து, உணவக உரிமையாளர்களுக்குரிய ஆணைகளை வழங்கி, கடைகளைப் பார்வையிட்டனர்.

திருச்சி காஜாமலை ரேஸ்கோர்ஸ் சாலையில், தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள “ஆரோக்கியமான மற்றும் சுகாதாரமான உணவகங்களின் வீதி” (Food Street) திறப்பு விழா இன்று நடைபெற்றது.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் ஆகியோர் கலந்துகொண்டு, உணவு வீதியை தொடங்கி வைத்து, உணவக உரிமையாளர்களுக்குரிய ஆணைகளை வழங்கி, கடைகளைப் பார்வையிட்டனர். இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் பிரதிக் தாயள், சட்டமன்ற உறுப்பினர்கள் கதிரவன், நவல்பட்டு விஜி மற்றும் பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்வுக்கு பின்னர் அமைச்சர் அருண்ராஜ் அளித்த பேட்டியில் கூறியதாவது, தமிழகத்தில் முதற்கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 6 மாவட்டங்களில், திருச்சியில் இந்தத் திட்டம் வெற்றிகரமாக முதன்முதலில் தொடங்கப்பட்டுள்ளது. வெளிப்படையான முறையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, நேர்காணல் மூலம் 39 உணவு விற்பனையாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மாவட்ட தொழில் மையம் மூலமாக சலுகைக் கடன் வசதியும், உணவு பாதுகாப்பு துறையின் சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன.

திருச்சி மாநகராட்சியின் சார்பில் சுமார் ரூ.50 லட்சம் செலவில் நடைபாதை அகலப்படுத்தப்பட்டு, மின்விளக்குகள், தனித்தனி மின் இணைப்புகள், தூய்மையான கழிவறைகள், குடிநீர் வசதி, போதுமான இருக்கைகள், வாகனப் பார்க்கிங் மற்றும் சிறிய நிகழ்ச்சிகளுக்கான திறந்தவெளி அரங்கம் போன்ற அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்கள் பணப் பரிவர்த்தனைக்கு மாற்றாக, பிரத்யேக ஸ்மார்ட் கார்டு முறையைப் பயன்படுத்தி எந்தக் கடையிலும் உணவுகளை வாங்கிக் கொள்ளலாம். ஆரோக்கியமான இயற்கை உணவுகளைத் தேர்ந்தெடுக்கும்போது கூடுதல் ரிவார்ட் பாயிண்ட்ஸ் வழங்கும் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தற்பொழுது மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை செயல்படும் இந்த உணவு வீதியை, பொதுமக்களின் கோரிக்கைக்கு ஏற்ப நள்ளிரவு 12 மணி வரை நீட்டிப்பது குறித்து பரிசீலிக்கப்படும். உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைப்படி, பொதுமக்கள் ஒரு நாளைக்கு 5 கிராமுக்கு மேல் உப்பு உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். உணவுகளில் உப்பின் அளவைக் குறைப்பது இதய நோய் மற்றும் பக்கவாதத்திலிருந்து நம்மைப் பாதுகாக்கும். எனவே, வரவிருக்கும் தீபாவளி பண்டிகையையொட்டி பலகாரங்கள் தயாரிப்பவர்கள் உப்பின் அளவைக் குறைக்க வேண்டும். இதனால் மக்கள் ஆரோக்கியம் மேம்படும்.

கெட்டுப்போன அல்லது எக்ஸ்பயரி தேதியை கடந்த உணவுகளை விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் இதுகுறித்து 9444042322 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்று கூறியுள்ளார்.

Published on: Nov 02, 2026 10:05 AM
Follow Us