AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி
திருச்சியில் விவசாயிகளுக்கு தீபாவளி பரிசுப் பொருட்கள் – அமைச்சர் ரமேஷ் வழங்கி மதிய உணவு உபசரிப்பு!

திருச்சியில் விவசாயிகளுக்கு தீபாவளி பரிசுப் பொருட்கள் – அமைச்சர் ரமேஷ் வழங்கி மதிய உணவு உபசரிப்பு!

Deepan
Deepan | Published: 02 Nov 2026 19:56 PM IST

திருச்சி மாவட்ட பொறுப்பு அமைச்சரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான ரமேஷ் ஏற்பாட்டில், விவசாயிகளுக்கு தீபாவளி பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் 300-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு புத்தாடைகள், இனிப்புகள் மற்றும் பட்டாசுகள் அடங்கிய பரிசுத் தொகுப்புகளை அமைச்சர் வழங்கினார். தொடர்ந்து, விவசாயிகளுடன் அமர்ந்து மதிய உணவும் அருந்தினார். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரமேஷ், விவசாயிகளைத் தாய், தந்தையாகக் கருதுவதாகவும், அவர்களைப் பெருமைப்படுத்தும் நோக்கில் தனிப்பட்ட முறையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பேசிய அய்யாக்கண்ணு, தனது அனுபவத்தில் விவசாயிகளை அழைத்து தீபாவளிப் பரிசு வழங்குவது இதுவே முதல்முறை என்றும், 300 விவசாயிகளுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கியது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார்

Follow Us