AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

2 பெண்களுக்கு பாலியல் தொல்லை.. காத்திருப்போர் பட்டியலுக்கு தூக்கியடிக்கப்பட்ட இன்ஸ்பெக்டர்.. நெல்லை சரக டிஐஜி அதிரடி!

Kulasekarapattinam Inspector Transfer : தூத்துக்குடி மாவட்டத்தில் பெண் காவலர், பெண் ஊழியர் ஆகியோருக்கு நேரிலும், வாட்ஸ் ஆப்பிலும் பாலியல் தொல்லை அளித்த புகாரின் அடிப்படையில், குலசேகரப்பட்டினம் காவல் ஆய்வாளரை காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றி நெல்லை சரக டி.ஐ.ஜி. திருநாவுக்கரசு உத்தரவிட்டார்.

2 பெண்களுக்கு பாலியல் தொல்லை.. காத்திருப்போர் பட்டியலுக்கு தூக்கியடிக்கப்பட்ட இன்ஸ்பெக்டர்.. நெல்லை சரக டிஐஜி அதிரடி!
இன்ஸ்பெக்டர் இன்னோஸ் குமார்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 05 Nov 2026 14:34 PM IST

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் உட்கோட்டத்திற்கு உட்பட்ட குலசேகரப்பட்டினத்தில் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த காவல் நிலையத்தில் இன்னோஸ் குமார் என்பவர் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், குலசேகரப்பட்டினம் காவல் நிலையத்தில் தரவு பதிவாளராக பெண் ஊழியர் ஒருவர் பணிபுரிந்து வந்தார். இவருக்கு ஆய்வாளர் இன்னோஸ் குமார் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. அத்துடன், அந்த பெண் ஊழியரின் செல்போன் எண்ணை பெற்ற ஆய்வாளர் இன்னோஸ் குமார் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்து வந்ததாக தெரிகிறது. இதனை, அந்த பெண் ஊழியர் கண்டித்தும் ஆய்வாளர் இன்னோஸ் குமார் கேட்கவில்லை என்று தெரிகிறது.

காவல் நிலையத்தில் பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை

இதனால், அதிருப்தி அடைந்த அந்த பெண் காவல் ஆய்வாளரின் வக்கிர செயல் குறித்து தனது கணவரிடம் தெரிவித்துள்ளார். இதனால், அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்த அவர் காவல் நிலையத்துக்கு சென்று ஆய்வாளர் இன்னோஸ் குமாரிடம் கேள்வி எழுப்பி உள்ளார். இதில், ஆத்திரமடைந்த ஆய்வாளர், அந்த பெண் ஊழியரை வேலைக்கு வர வேண்டாம் என்று கூறியதாக தெரிகிறது. அத்துடன், அந்த பணியிடத்திற்கு பெண் போலீஸ் ஒருவர் நியமிக்கப்பட்டார்.

மேலும் படிக்க: ஆந்திர கடல் பகுதியில் மாயமான 9 சென்னை மீனவர்கள்.. அதிகாலை வந்த கடைசித் தகவல்! ஹெலிகாப்டர்கள் மூலம் தீவிர தேடுதல்!

பெண் காவலருக்கும் பாலியல் தொல்லை

அவருக்கும், காவல் ஆய்வாளர் இன்னோஸ் குமார் பாலியல் தொந்தரவு அளித்ததாக தெரிகிறது. அத்துடன், அவரது செல்போன் வாட்ஸ் ஆப்-க்கு ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பி பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் காவலர் மற்றும் ஏற்கனவே பாலியல் தொந்தரவால் பாதிக்கப்பட்ட பெண் ஊழியர் ஆகிய இருவரும் காவல் உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

ஆய்வாளர் மீது இரு பெண்களும் பாலியல் புகார்

இதில், சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் இன்னோஸ் குமாரிடம் காவல் உயர் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டதில், அவர் பெண் காவலர் மற்றும் பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை அளித்ததும், வாட்ஸ் ஆப் வழியாக ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பியதும் உறுதி செய்யப்பட்டது. இதனிடையே, பெண் காவலர், பெண் ஊழியர் அளித்த புகாரின் உண்மைத்தன்மை தொடர்பாகவும் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது.

காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி டிஐஜி உத்தரவு

இதைத் தொடர்ந்து, காவல் ஆய்வாளர் பாலியல் தொந்தரவு புகார் குறித்த அறிக்கை திருநெல்வேலி சரக டி. ஐ. ஜி. திருநாவுக்கரசு கவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில், குலசேகரப்பட்டினம் காவல் ஆய்வாளர் இன்னோஸ் குமாரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அத்துடன், அவர் மீது மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: வீட்டின் மாடியில் இருந்த தீபாவளி வெடிகள் வெடித்துச் சிதறி இளைஞர் பலி.. 3 பேர் படுகாயம்.. மதுரையில் பெரும் சோகம்!!

Follow Us