AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

IPL 2027: தலா 2 வீரர்கள் பரிமாற்றம்.. சிஎஸ்கே – எஸ்ஆர்ஹெச் ரகசிய அதிரடி ஒப்பந்தம்..!

IPL 2027 Trades: சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையே தலா 2 வீரர்கள் என 4 வீரர்கள் வர்த்தகம் மூலம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, லியாம் லிவிங்ஸ்டோன் மற்றும் ஜாக் எட்வர்ட்ஸ் ஆகியோர் சிஎஸ்கே அணியிலும், கலீல் அகமது மற்றும் நாதன் எல்லிஸ் ஆகியோர் எஸ்ஆர்ஹெச் அணியிலும் இணைந்துள்ளனர்.

IPL 2027: தலா 2 வீரர்கள் பரிமாற்றம்.. சிஎஸ்கே – எஸ்ஆர்ஹெச் ரகசிய அதிரடி ஒப்பந்தம்..!
ஐபிஎல் 2027 பரிமாற்றங்கள்Image Source: X
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 05 Nov 2026 15:50 PM IST

ஐபிஎல் 2027-க்கு (IPL 2027) முன்பே ஒரு பெரிய வர்த்தகம் நடைபெற்றுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையே தலா 2 வீரர்கள் என 4 வீரர்கள் வர்த்தகம் மூலம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, லியாம் லிவிங்ஸ்டோன் மற்றும் ஜாக் எட்வர்ட்ஸ் ஆகியோர் சிஎஸ்கே அணியிலும், கலீல் அகமது மற்றும் நாதன் எல்லிஸ் ஆகியோர் எஸ்ஆர்ஹெச் அணியிலும் இணைந்துள்ளனர். இன்று அதாவது 2026 நவம்பர் 5ம் தேதி இந்த வர்த்தகம் குறித்த அதிகாரப்பூர்வ விவரங்களை ஐபிஎல் வெளியிட்டது. அனைவரும் ஹர்திக் பாண்ட்யா குறித்த வர்த்தகத்தை எதிர்பார்த்த நிலையில், எதிர்பாராதவிதமாக இந்த அதிரடி வர்த்தகம் நிகழ்ந்துள்ளது.

ALSO READ: ஐபிஎல் 2027 ஏலத்திற்கான தக்கவைப்பு காலக்கெடு நீட்டிப்பு..? ஏல தேதியிலும் மாற்றமா?

மாற்றப்பட்ட வீரர்கள் விவரம்:


இதுதொடர்பாக வெளியிட்டப்பட்ட அறிக்கையில், “இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் லிவிங்ஸ்டோன் ரூ. 6 கோடி என்ற குறைக்கப்பட்ட விலைக்கு சிஎஸ்கே அணியில் இணைந்துள்ளார். முன்னதாக அவரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரூ. 13 கோடிக்கு வாங்கியிருந்தது. ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான எட்வர்ட்ஸும் தனது தற்போதைய கட்டணமான 3 கோடி ரூபாய்க்கு சிஎஸ்கே அணியில் இணைந்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்காக சர்வதேசப் போட்டிகளில் அறிமுகமாவதற்கு முன்பே எட்வர்ட்ஸை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஒப்பந்தம் செய்தது. ஆனால், கால் காயம் காரணமாக ஐபிஎல் 2026 தொடரிலிருந்து அவர் விலக்கப்பட்டார்.” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

கலீல் அகமது குறித்து எழுதப்பட்ட குறிப்பில், “இதற்குப் பதிலாக, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இடது கை வேகப்பந்து வீச்சாளர் கலீலை அவரது தற்போதைய கட்டணமான ரூ. 4.8 கோடிக்கு தங்கள் அணியில் சேர்த்துள்ளது. இதற்கு முன்பு 2018 முதல் 2021 வரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இருந்த கலீல், ஐபிஎல் 2025-ல் தனது சிறப்பான ஆட்டத்திற்குப் பிறகு மீண்டும் அந்த அணிக்குத் திரும்பியுள்ளார். அந்த சீசனில் சி.எஸ்.கே அணிக்காக 14 போட்டிகளில் 15 விக்கெட்டுகளை கலீல் எடுத்தார். ஐபிஎல் 2026-ல் சி.எஸ்.கே அணிக்காக 5 போட்டிகளில் விளையாடிய அவர், பின்னர் வலது தொடைத்தசைப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அந்த சீசன் முழுவதும் விளையாட முடியாமல் போனது” என்று குறிப்பிடப்பட்டது.

ALSO READ: அடுத்த இலக்காக லியாம் லிவிங்ஸ்டோன்.. குறிவைத்த சிஎஸ்கே!

எல்லிஸ் குறித்து, “ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் எல்லிஸும் தனது தற்போதைய கட்டணமான 2 கோடி ரூபாய்க்கு SRH அணியில் இணைந்துள்ளார். தனது மாறுபட்ட பந்துவீச்சு மற்றும் கடைசி ஓவர்களில் திறம்பட பந்துவீசுவதற்காக அறியப்பட்ட எல்லிஸ், மதிப்புமிக்க டி20 அனுபவத்தைக் கொண்டு வருவதோடு, SRH-ன் வேகப்பந்து வீச்சு பலத்தையும் மேலும் வலுப்படுத்துகிறார்” என்று எழுதப்பட்டிருந்தது.

Follow Us