பிரசவத்திற்குப் பின் உடல் எடையை குறைத்த ரகசியம்: நடிகை சினேகாவின் ஃபிட்னஸ் சீக்ரெட்ஸ்!
Sneha Post Pregnancy Weight Loss: பிரசவத்திற்குப் பிறகு சினேகா தனது உடல் எடையைக் குறைத்து ஃபிட்னஸைப் பராமரிக்க 'வெயிட் ட்ரெய்னிங்' உடற்பயிற்சியை முதன்மையாகப் பின்பற்றி வருகிறார். உணவைப் பொறுத்தவரை பட்டினி கிடக்காமல் கலோரி மற்றும் மேக்ரோக்களைக் கணக்கிட்டு, எண்ணெய் குறைத்த கிரில் உணவுகள் மற்றும் சமைத்த சத்தான உணவுகளையே உட்கொள்கிறார்.
புன்னகை அரசி என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகை சினேகா, (Actress Sneha) தமிழ் திரையுலகில் நீண்ட காலமாக முன்னணி நடிகையாக வலம் வருவதுடன், தனது அழகு மற்றும் ஃபிட்னஸை இன்றும் இளமையோடு பராமரித்து வருகிறார். குறிப்பாக, குழந்தைகள் பிறந்து உடல் எடை அதிகரித்தப் பிறகு, அதனை மீண்டும் பழைய நிலைமைக்குக் கொண்டுவர அவர் பின்பற்றிய எளிய வழிமுறைகள் தற்போது பலரையும் ஈர்த்துள்ளன. பிரபல ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சினேகா பகிர்ந்துகொண்ட வெயிட் லாஸ் மற்றும் டயட் ரகசியங்கள் விவரிக்கபப்ட்டுள்ளன.
Also Read: 70 வயதிலும் இளமைத் தோற்றம்… ‘தக் லைஃப்’ கமல்ஹாசனின் ஃபிட்னஸ் ரகசியங்கள் இதுதான்!
உடற்பயிற்சியில் ஏற்பட்ட மாற்றம்
குழந்தைக்குப் பின் உடல் எடையைக் குறைக்க தான் செய்த முயற்சிகள் குறித்து சினேகா மனம் திறந்துள்ளார். “முன்பெல்லாம் யோகா, HIIT, ஏரோபிக்ஸ் என பல வகையான உடற்பயிற்சிகளைச் செய்தேன். ஆனால், இப்போது என் உடலுக்கு எது ஒத்து வருமோ அதைக் கவனமாகத் தேர்வு செய்கிறேன். கடந்த ஒரு வருடமாக எனது உடல் எடையையும் ஃபிட்னசையும் சீராகப் பராமரிக்க ‘வெயிட் ட்ரெய்னிங்’ (Weight Training) தான் பெரிதும் உதவுகிறது. இது என்னை உடல்ரீதியாக மிகவும் பலமானவளாக மாற்றியுள்ளது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
டயட் மற்றும் உணவு முறை
கடினமான பட்டினி முறைகளை நம்பாமல், ஆரோக்கியமான சமச்சீர் உணவையே சினேகா பின்பற்றி வருகிறார்.
கலோரி மற்றும் மேக்ரோ கணக்கீடு (Macro Counting):
நாம் எவ்வளவு கலோரி உட்கொள்கிறோம் என்பதில் கவனமாக இருப்பது அவசியம் என்கிறார். உணவில் உள்ள கார்போஹைட்ரேட், புரோட்டீன், நார்ச்சத்து மற்றும் தாதுச்சத்துக்கள் சரியான அளவில் இருக்குமாறு பார்த்துக் கொள்கிறார்.
கிரில் செய்த உணவுகள்: அதிக எண்ணெய் சேர்த்த உணவுகளைத் தவிர்த்து, பெரும்பாலும் கிரில் (Grilled) செய்யப்பட்ட மற்றும் சுத்தமான, வீட்டில் சமைத்த எளிய உணவுகளை மட்டுமே உண்கிறார்.
உப்பு மற்றும் மசாலா குறைவு: உணவில் உப்பின் அளவையும், காரமான மசாலாப் பொருட்களையும் குறைத்துக்கொள்வது செரிமானத்திற்கு மிகவும் நல்லது எனக் கூறுகிறார்.
Also Read: 70 வயதிலும் இளமைத் தோற்றம்… ‘தக் லைஃப்’ கமல்ஹாசனின் ஃபிட்னஸ் ரகசியங்கள் இதுதான்!
சர்க்கெட்டுக்கு நோ சொன்ன சினேகா!
தன் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க அவர் செய்யும் மிக முக்கிய விஷயம், சர்க்காரை முற்றிலுமாகத் தவிர்ப்பது ஆகும். மாதத்திற்கு ஒரே ஒரு முறை மட்டுமே சர்க்கெட்டை அனுமதிக்கிறாராம், மற்ற நாட்களில் சர்க்கரை சேர்த்துக் கொள்வதே இல்லை. சர்க்கரையைத் தவிர்ப்பது உடல் எடையைக் குறைப்பதோடு மட்டுமின்றி, உடலில் தேவையற்ற கொழுப்பு சேர்வதைத் தடுப்பதாக உடல்நல நிபுணர்களும் உறுதிப்படுத்துகிறார்கள்.
இவற்றுடன் தினமும் தாராளமாகத் தண்ணீர் குடிப்பதும், உடலை எப்போதுமே சுறுசுறுப்பாக வைத்துக் கொள்வதும்தான் தனது இளமை மற்றும் ஃபிட்னஸின் ரகசியம் என்கிறார் நடிகை சினேகா.