AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

54 சவரன், ரூ.15.46 லட்சம் அபேஸ் செய்த வீட்டு பணிப்பெண்.. மைலாப்பூரில் ஷாக் சம்பவம்..

Chennai Crime: சென்னையில் 15 ஆண்டுகளாக நம்பிக்கையுடன் வீட்டு வேலை செய்து வந்த பெண்ணே, ஓய்வு பெற்ற பெண் அரசு அதிகாரியின் வீட்டில் தங்க நகைகள் மற்றும் ரூ.15.46 லட்சம் ரொக்கப் பணத்தைத் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக புகார் அளிக்கப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் பணிப்பெண்ணை போலீசார் கைது செய்து, திருடப்பட்ட நகைகள் மற்றும் பணத்தை மீட்டுள்ளனர்.

54 சவரன், ரூ.15.46 லட்சம் அபேஸ் செய்த வீட்டு பணிப்பெண்.. மைலாப்பூரில் ஷாக் சம்பவம்..
கைது செய்யப்பட்ட பணிப்பெண்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 05 Nov 2026 15:25 PM IST

நவம்பர் 5, 2026: சென்னை மயிலாப்பூரில் ஓய்வு பெற்ற பெண் அரசு அதிகாரியின் வீட்டில் 54 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.15.46 லட்சம் ரொக்கப் பணத்தைத் திருடிச் சென்ற வீட்டு வேலைக்காரப் பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். புகார் அளிக்கப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் குற்றவாளியைக் கண்டுபிடித்து நகை, பணத்தை மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் திருட்டு!

சென்னை மயிலாப்பூர் காரணீஸ்வரர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பத்மா (வயது 85). ஓய்வு பெற்ற வருவாய்த் துறை அதிகாரியான இவர், கணவர் வெங்கடகோபால் உயிரிழந்த நிலையில், தனது மகள் சுஜாதா (வயது 3) உடன் வசித்து வருகிறார். சுஜாதாவும் வங்கியில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர்.

மேலும் படிக்க: 2 பெண்களுக்கு பாலியல் தொல்லை.. காத்திருப்போர் பட்டியலுக்கு தூக்கியடிக்கப்பட்ட இன்ஸ்பெக்டர்.. நெல்லை சரக டிஐஜி அதிரடி!

இவர்களது வீட்டில் மந்தைவெளியைச் சேர்ந்த மணிமேகலை (வயது 53) என்பவர் கடந்த 15 ஆண்டுகளாக வீட்டு வேலை செய்து வந்துள்ளார். இதனால் அவர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்த பத்மா, வீட்டின் அனைத்து அறைகளுக்கும் செல்ல அனுமதித்துள்ளார்.

54 சவரன் நகை, ரூ.15.46 லட்சம் மாயம்

இந்நிலையில், நேற்று மாலை வீட்டில் வைக்கப்பட்டிருந்த ட்ரங்க் பெட்டியைக் காணவில்லை. அதில் 54 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.15.46 லட்சம் ரொக்கம் இருந்துள்ளது. இதுகுறித்து பத்மா மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

மேலும் படிக்க: அடுத்தடுத்து பழி வாங்குவோம்.. பயங்கர ஆயுதங்களுடன் சோஷியல் மீடியாவில் ரீல்ஸ்.. சீனில் இறங்கிய சிவகங்கை போலீஸ்!

சிசிடிவி காட்சியால் சிக்கிய பணிப்பெண்

இதையடுத்து, மயிலாப்பூர் குற்றப்பிரிவு போலீசார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, மணிமேகலை ட்ரங்க் பெட்டியைத் தூக்கிச் சென்றது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து ஆய்வாளர் ரவி தலைமையிலான போலீசார் மந்தைவெளியில் உள்ள அவரது வீட்டில் வைத்து மணிமேகலையைக் கைது செய்தனர். அவரிடமிருந்து திருடப்பட்ட நகைகள் மற்றும் பணம் மீட்கப்பட்டன.

ரூ.24 லட்சம் கடன்.. திருட்டில் ஈடுபட்டதாக வாக்குமூலம்!

விசாரணையில், குடிசை மாற்று வாரியக் குடியிருப்பு ஒதுக்கீடு, கணவரின் மருத்துவச் செலவு மற்றும் குடும்பச் செலவுகளுக்காக ரூ.24 லட்சம் கடன் வாங்கியதாகவும், கடன் கொடுத்தவர்கள் தொடர்ந்து நெருக்கடி கொடுத்ததால் திருடியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தாயும் மகளும் வீட்டில் தனியாக வசிப்பதையும், நகை மற்றும் பணம் வைக்கப்பட்டிருந்த அறையைப் பூட்டி வைக்காததையும் பயன்படுத்தி திருடத் திட்டமிட்டதாக போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Follow Us