AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

இன்று தொடங்குகிறது தமிழ் படம் 3 ஷூட்டிங் – வைரலாகும் பதிவு!

Tamizh Padam 3 Movie Shooting Update | தமிழ் சினிமாவில் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற தமிழ் படம் என்ற படத்தின் மூன்றாம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கியதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக பதிவு ஒன்றை வெளியிட்டு அறிவித்து உள்ளது.

இன்று தொடங்குகிறது தமிழ் படம் 3 ஷூட்டிங் – வைரலாகும் பதிவு!
தமிழ் படம் 3Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 05 Nov 2026 15:51 PM IST

சினிமாவில் பல விதமான ஜானர்களில் படங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றது. ஒவ்வொரு ஜானரிலும் படங்கள் வெளியாகும் போது அதனைப் கொண்டாட அதற்கு என்று ஒரு ரசிகர்கள் பட்டாளம் இருப்பார்கள். இந்த நிலையில் தமிழ் சினிமாவில் பல விதமான ஜானர்களில் வெளியான படங்களை கிண்டலடிக்கும் விதமாக சட்டையர் பாணியில் வெளியானதுதான் தமிழ் படம். இந்த தமிழ் படம் (Tamizh Padam) இதுவரை இரண்டு பாகங்களாக வெளியாகி உள்ளது. முதல் பாகம் வெளியான போது அந்தப் படத்தில் மற்றப் படங்களை மட்டும் இன்றி அந்த சூழலில் நடைப்பெற்றுக்கொண்டு இருந்த அரசியல் நிகழ்வுகளையும் கிண்டலடிக்கும் விதமாக பல காட்சிகள் இடம்பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இரண்டாம் பாகத்திலும் அப்படிதான் படங்கள் மட்டும் இன்றி தமிழ் நாடு மற்றும் இந்தியாவில் நடைப்பெற்ற நிகழ்வுகளை கிண்டலடிக்கும் விதமாக வெளியாகி இருந்தது.

இந்த இரண்டு பாகங்களையும் இயக்குநர் சிஎஸ் அமுதன் எழுதி இயக்கி இருந்தார். மேலும் தமிழ் படம் முதல் பாகம் மற்றும் தமிழ் படம் இரண்டாம் பாகம் என இரண்டிலும் நடிகர் சிவா நாயகனாக நடித்து இருந்த நிலையில் மற்ற நடிகர்கள் மாறிமாறி நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு இரண்டாம் பாகம் வெளியான நிலையில் தற்போது தமிழ் படம் 3 படத்தின் ஷூட்டிங் தொடங்கியுள்ளது.

இன்று தொடங்குகிறது தமிழ் படம் 3 ஷூட்டிங் – வைரலாகும் பதிவு:

அதன்பட் இந்த தமிழ் படம் 3 படத்தையும் இயக்குநர் சி.எஸ்.அமுதன் எழுதி இயக்க உள்ளார். இந்தப் படத்திலும் நடிகர் சிவா நாயகனாக நடிக்கும் நிலையில் அவருடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த நிலையில் தமிழ் படம் 3 குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி இந்தப் படத்தின் மூன்றாம் பாகத்திற்கான படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தில் அவருடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Also Read… என்னப்பா இது…. மீண்டும் சாப்பாட்டிற்காக போட்டியாளர்களிடம் சண்டையிடும் ஜேசன்…!

தமிழ் படம் 3 படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… கமல் ஹாசனின் பிறந்த நாளில் தொடங்கும் அவரது புதுப் படத்தின் ஷூட்டிங்? வைரலாகும் தகவல்

Follow Us