பிக்பாஸில் சீரியல் கில்லர் அஸ்மிதா என்பதை சரியாக கணித்த முனியம்மாள் – வைரலாகும் வீடியோ
Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இந்த வாரம் டாஸ்குடன் சீக்ரெட் டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. அந்த சீக்ரெட் டாஸ்க் குறித்து முனியம்மாள் சரியாக கணிக்கும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
பிக்பாஸ் தமிழ் சீசன் 10 (Bigg Boss Tamil Season 10) நிகழ்ச்சி கடந்த 2026-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 06-ம் தேதி முதல் தொடங்கி தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து மொத்தம் 24 போட்டியாளர்கள் இந்த ஆண்டில் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பட்டனர். அதில் 9 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நிலையில் தற்போது 15 போட்டியாளர்களுடன் இந்த நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கின்றது. முந்தைய சீசன்களைவிட இந்த சீசன் ரசிகர்களிடையே அதிக அளவில் பேசுபொருளாகி உள்ளது. அது மட்டும் இன்றி தமிழ் மொழியில் மட்டும் இன்றி மற்ற மொழிகளிலும் குறிப்பாக மலையாள மொழி ரசிகர்களிடையே இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி அதிக அளவில் கவனத்தை ஈர்த்து வருகின்றது. மேலும் போட்டியாளர்களின் விளையாட்டு மட்டும் இன்றி நிகழ்ச்சி குழுவின் புதுப் புது ஐடியாக்கள் மக்களிடையே அதிக அளவில் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
இந்த நிலையில் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் 8 வாரங்கள் முடிவடைந்து தற்போது 9-வது வாரம் சென்று கொண்டு இருக்கின்றது. இந்த வீட்டில் இந்த வாரம் பிபி திருந்துங்கடா அகடமி டாஸ்க் வழங்கப்பட்டு வீட்டில் உள்ள போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். இதில் அஸ்மிதா மற்றும் ஜேசன் இருவரும் சீரியல் கில்லர்களாக சீக்ரெட் டாஸ்கையும் விளையாடி வருகின்றனர்.
பிக்பாஸில் சீரியல் கில்லர் அஸ்மிதா என்பதை சரியாக கணித்த முனியம்மாள்:
இந்த நிலையில் நேற்று 59-வது நாளிற்கான எபிசோடில் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட சீக்ரெட் டாஸ்கை வெற்றிகரமாக முடித்துவிட்டனர். இந்த நிலையில் இன்று வீட்டில் உள்ள அனைவருக்கும் சீக்ரெட் டாஸ்க் குறித்து தெரியவந்துள்ளது. இந்த நிலையில் அஸ்மிதா இன்றைய டாஸ்கில் அவரின் ஓவர் பர்ஃபார்மன்ஸை பார்த்து முனியம்மாவிற்கு அவர்தான் சீரியல் கில்லர் என்பதை கண்டுபிடித்து உள்ளார். அது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி இணையத்தில் அதிக அளவில் கவனத்தை ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
Also Read… Arasan: வேர்ல்ட் ஆப் அரசன் ப்ரோமோ தீபாவளிக்கு இல்லையா? சிம்பு ரசிகர்களுக்கு ஷாக் தகவல்!
பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Day60 #Promo3 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision https://t.co/HEzLQwnnO8
— Vijay Television (@vijaytelevision) November 5, 2026



