கரையைக் கடந்த முரசு புயல்.. மீண்டும் கடலுக்கு சென்ற சென்னை மீனவர்கள்!
வங்கக்கடலில் உருவான தீவிர புயலான முரசு, இன்று (நவம்பர் 3) அதிகாலை 3.30 மணி முதல் 5.30 மணிக்குள் நெல்லூர் – நர்சாபூர் இடையே ஓங்கோல் அருகே கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 100 முதல் 110 கி.மீ. வேகத்திலும், அதிகபட்சமாக 120 கி.மீ. வேகத்திலும் சூறைக்காற்று வீசியது. புயல் கரையைக் கடந்தாலும் ஆந்திராவில் அடுத்த 12 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், முரசு புயல் படிப்படியாக வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, புயல் காரணமாக கடலுக்குச் செல்லாமல் இருந்த சென்னை மீனவர்கள் இன்று மீண்டும் மீன்பிடிக்கச் சென்றனர். இருப்பினும், கடல் அலைகள் தொடர்ந்து சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.