AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தர்மன் படத்திலிருந்து வெளியானது ஸ்ரீலீலாவின் அறிமுக வீடியோ!

Sreeleelas introductory video from the film Dharman movie | தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை ஸ்ரீலீலா. இவர் தற்போது தர்மன் படத்தில் இணைந்துள்ளதை வீடியோ வெளியிட்டு அறிவித்து உள்ளனர் படக்குழு. அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தர்மன் படத்திலிருந்து வெளியானது ஸ்ரீலீலாவின் அறிமுக வீடியோ!
ஸ்ரீலீலாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 04 Nov 2026 11:59 AM IST

தெலுங்கு சினிமாவில் சித்தரங்காடு என்ற படம் கடந்த 2017-ம் ஆண்டு வெளியானது. இந்தப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார் நடிகை ஸ்ரீலீலா (Actress Sreeleela). அதனைத் தொடர்ந்து கடந்த 2019-ம் ஆண்டு கன்னட சினிமா மூலம் நாயகியாக அறிமுகம் ஆனார். தொடர்ந்து கன்னட சினிமாவில் படங்களில் நடித்து வந்த நடிகை ஸ்ரீலீலா அதனைத் தொடர்ந்து தெலுங்கு மொழியிலும் படங்களில் நடிக்கத் தொடங்கினார். தொடர்ந்து தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் பிசியான நடிகையாக வலம் வந்த இவர் கடந்த 2025-ம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவில் நடிகையாக நடிக்க தொடங்கினார். அதன்படி இந்த சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான பராசக்தி என்ற படத்தின் மூலம் நடிக்கத் தொடங்கிய இவர் தொடர்ந்து தற்போது அதிக அளவில் தமிழ் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

தொடர்ந்து தமிழ், தெலுங்கு மொழிகளில் பிசியான நாயகியாக வலம் வரும் இவர் தற்போது இந்தி மொழிகளிலும் படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் தொடர்ந்து இவரது நடிப்பில் படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

தர்மன் படத்திலிருந்து வெளியானது ஸ்ரீலீலாவின் அறிமுக வீடியோ:

இந்த நிலையில் தமிழ் மொழியிலும் நடிகை ஸ்ரீலீலா வரிசையாக படங்களில் கமிட்டாகி வருகிறார். அவர் தற்போது நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பில் உருவாகி வரும் தர்மன் படத்தில் இணைந்துள்ளது குறித்து அறிமுக வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் படத்தில் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படத்தை இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து எழுதி இயக்கி வரும் நிலையில் நடிகர் கமல் ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் ஃபிலிம் இண்டர்நேஷ்னல் தயாரித்து வருகின்றது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் வருகின்ற 2027-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாக வாய்ப்பு உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Also Read… Suriya: சூர்யாவின் சீன் திரைப்படத்தின் தமிழக FDFS எப்போது தெரியுமா?

தர்மன் படக்குழு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

Also Read… இணையத்தில் வைரலாகும் ஜீவாவின் தங்கபுள்ள பாடல் வீடியோ!

Follow Us