AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

நான் எதற்கும் தயார்.. சக போட்டியாளர்களால் கடுப்பாக பேசிய ஜேசன் – தீயாய் பரவும் ப்ரோமோ!

Bigg Boss 10 Tamil: தமிழில் இந்த பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிவருகிறது. இந்த வாரத்தில் தொடர்ந்து பேக் டூ பேக் டாஸ்குகள் மற்றும் சண்டைகள் என இந்த வாரமே பரபரப்பாக அமைந்தது. அந்த வகையில், சக போட்டியாளர்களின் கருத்து காரணமாக எதற்கும் தயாராக இருப்பதாக ஜேசன் கூறும் ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.

நான் எதற்கும் தயார்.. சக போட்டியாளர்களால் கடுப்பாக பேசிய ஜேசன் – தீயாய் பரவும் ப்ரோமோ!
பிக் பாஸ் சீசன் 10 ப்ரோமோImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 01 Nov 2026 16:23 PM IST

நடிகர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) தொகுத்துவரும் நிகழ்ச்சிதான் பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10). இந்த ஷோவானது கடந்த 2026 செப்டம்பர் 6ம் தேதி முதல் ஆரம்பமான நிலையில், கிட்டத்தட்ட 8 வாரங்களை கடந்துள்ளது. மொத்தம் 19 போட்டியாளர்களுடன் ஆரம்பமான இந்த நிகழ்ச்சியில் தற்போது வெறும் 15 போட்டியாளர்கள் மட்டுமே இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் தற்போது டிடிஃஎப் வாசன் லீடாக இருந்துவரும் நிலையில், அவருக்கு மக்கள் மத்தியில் வாக்குகளும் அதிகமாக இருக்கிறது. அந்த விதத்தில் இன்று வார இறுதியான நிலையில், பிக் பாஸில் விஜய் சேதுபதி போட்டியாளர்களை நேரில் சந்தித்துள்ளார்.

அந்த விதத்தில் இந்த வீட்டில் எந்த நபருடைய விளையாடும் விதம் மற்றும் அவர் விளையாடுவது அசௌகரியமாக இருக்கிறது என விஜய் சேதுபதி கேள்வி கேட்டிருந்தார். அதற்கு சக போட்டியாளர்கள் ஜேசனை கூறுவதுபோல இந்த ப்ரோமோவில் காட்டப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: யாரோட உயர்வையும் யாராலையும் தடுக்க முடியாதுடா கெடுக்க முடியாதுடா… 21 ஆண்டுகளைக் கடந்தது தளபதி விஜயின் சிவகாசி படம்!

ஜேசனின் விளையாட்டு அசௌகரியமாக உள்ளதாக போட்டியாளர்கள் பேச்சு:

இந்த ப்ரோமோவில் விஜய் சேதுபதி போட்டியாளர்களிடையே எந்த போட்டியாளரின் விளையாடும் விதம் மற்றும் அசௌகரியமாக இருக்கிறது என கேள்வி கேட்டிருந்தார். உடனே எழுந்த அஷ்மிதா ஜேசனை கூறியுள்ளார். மேலும் வினோத் பாபு, கரீஷ்மா போன்ற போட்டியாளர்களும் ஜேசனின் விளையாட்டு அசௌகரியமாக இருப்பதாக கூறியிருந்தனர். இதனால கோபமடைந்த ஜேசன் எனக்கும் இந்த வீட்டில் உள்ள எல்லாருமே எனக்கு அசௌகரியமானவர்கள்தான், நான் எதற்கும் தயாராக இருக்கிறேன் என விஜய் சேதுபதி முன்னே திமிராக பேசியுள்ளார். இது தொடர்பான ப்ரோமோ வெளியாகி இணையதஹில் வைரலாகிவருகிறது.

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் 56வது நாளின் 3வது ப்ரோமோ குறித்த எக்ஸ் பதிவு:

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் இந்த வாரத்தில் எவிக்ஷனில் இறுதியாக கரீஷ்மா மற்றும் முகேஷ் இருவரும் இருந்துள்ளனர். அந்த விதத்தில் ஜேசன் மற்றும் டிடிஃஎப் வாசன் என இருவருக்கும் எவிக்ஷன் ஃப்ரீ பாஸ் உள்ளது. அதை இவர்கள் இவர்களில் யாராவது ஒருவருக்கு பயன்படுத்தலாம். அந்த விதத்தில் டிடிஃஎப் வாசன் முகேஷுக்கு எவிக்ஷன் ஃப்ரீ பாஸை பயன்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: சீன் பட கதை குறித்து ஆன்லைனில் பரவும் கருத்து.. நச் பதில் கொடுத்த இயக்குநர் ஜித்து மாதவன்!

இதனால் இந்த வாரத்தில் கரீஷ்மா வெளியேற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இது இந்த நிகழ்ச்சியின் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிடிஃஎப் வாசனுக்கு ரெட் கார்ட் வாங்கிக்கொடுக்க நினைத்த முகேஷுக்கு அவர் தனது எவிக்ஷன் ஃப்ரீ பாஸை பயன்படுத்திவிட்டாரா? என ரசிகர்கள் விமர்சித்துவருகிறார்கள்.

Follow Us