யாரோட உயர்வையும் யாராலையும் தடுக்க முடியாதுடா கெடுக்க முடியாதுடா… 21 ஆண்டுகளைக் கடந்தது தளபதி விஜயின் சிவகாசி படம்!
21 Years Of Sivakasi Movie | தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் தளபதி விஜயின் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் சிவகாசி. இந்தப் படம் 21 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றன.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களாக இருந்து அரசியலில் குதித்தவர்கள் பலர் உள்ளனர். ஆனால் அதில் மக்களின் மனதில் இடம் பிடித்து மாபெரும் சாதனைகளை அரசியலில் புரிந்தவர்களின் எண்ணிக்கை என்பது மிகமிக குறைவு. அந்த வரிசையில் தமிழ் நாட்டில் தற்போது தளபதி விஜயும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக மக்களால் கொண்டாடப்படும் பல நடிகர்கள் அரசியலில் களமிறங்கி தோல்வியை சந்தித்து சென்ற நிலையில் விஜய் (Thalapathy Vijay) அரசியலுக்கு வந்து என்ன மாற்றத்தை செய்வார் என்று விமர்சனங்கள் இருந்தது. ஆனால் அந்த விமர்சனங்கள் அனைத்தும் மாற்றி போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே வெற்றியும் பெற்று தற்போது தமிழ் நாட்டின் முதலமைச்சராக பணியாற்றி வருகிறார் தளபதி விஜய். இவர் இனி படங்களில் நடிக்க மாட்டேன் என்று தெரிவித்த நிலையில் அவரது முந்தைய படங்களை ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகின்றது.
அந்த வகையில் நடிகர் தளபதி விஜய் நடிப்பில் கடந்த 2005-ம் ஆண்டு நவம்பர் மாதம் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் சிவகாசி. ஆக்ஷன் ட்ராமா ஃபேமிலி செண்டிமெண்ட் பாணியில் உருவான இந்தப் படத்தினை இயக்குநர் பேரரசு எழுதி இயக்கி இருந்தார். இவரது இயக்கத்தில் தளபதி விஜய் பலப் படங்களில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




21 ஆண்டுகளைக் கடந்தது தளபதி விஜயின் சிவகாசி படம்:
இந்தப் படத்தில் நடிகர் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிகை அசின் நடித்து இருந்தார். இதில் சிறு வயதிலேயே குடும்பத்தை பிரிந்து வாழும் விஜய் பெரிய மனிதராக ஆன பிறகு தனது குடும்பத்தை தேடி வருகிறார். அப்போது தனது குடும்பம் சிதைந்து இருப்பதை பார்த்த அவர் என்ன செய்கிறார் என்பதே படத்தின் கதை. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 21 ஆண்டுகள் நிறைவடைந்ததை தற்போது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
🔥 21 YEARS OF MASS & MADNESS! 🔥
On this day, 1st November 2005, #Sivakasi hit the big screens and gave us unforgettable mass moments!
21 years later, the celebration continues. ❤️
THALAPATHY VIJAY – THE MASS NEVER FADES! 🔥
#21YearsOfSivakasi @actorvijay @CMOTamilnadu https://t.co/beH5uwgP9E
— Dayal Ezhumalai (@iamdayal) November 1, 2026