AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பிக்பாஸில் புது புது டாஸ்குகளை களமிறக்கும் டீம்… வெற்றியை நோக்கி விளையாடும் போட்டியாளர்கள்!

Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் முன்பு எப்போதும் இல்லாத புதுப் புது டாஸ்குகளி உறுவாக்கி போட்டியாளர்களை விளையாட வைக்கின்றது நிகழ்ச்சி குழு. இது போட்டியாளர்களுக்கு மட்டுமின்றி பார்வையாளர்களுக்கும் விறுவிறுப்பை ஏற்படுத்தி வருகின்றது.

பிக்பாஸில் புது புது டாஸ்குகளை களமிறக்கும் டீம்… வெற்றியை நோக்கி விளையாடும் போட்டியாளர்கள்!
பிக்பாஸ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 29 Oct 2026 11:07 AM IST

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து தொடர்ந்து பல டாஸ்குகள் புதுசு புதுசாக வழங்கப்பட்டு வருகின்றது. இந்த பிக்பாஸ் (Bigg Boss Tamil) நிகழ்ச்சி தமிழ் சீசனில் இதுவரை எந்த சீசன்களிலும் வழங்கப்படாத பல டாஸ்குகள் இந்த 10-வது சீசனில் அதிக அளவில் வழங்கப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு டாஸ்கும் பார்வையாளர்களை மட்டும் இன்றி போட்டியாளர்களுக்கும் அதிக அளவில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி வருகின்றது. அதன்படி பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்கி தொடர்ந்து 7 வாரங்கள் முடிவடைந்து தற்போது 8-வது வாரத்தை எட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் தற்போது 15 போட்டியாளர்கள் எஞ்சியுள்ள நிலையில் போட்டியும் அதிக அளவில் சூடுபிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இரண்டு போட்டியாளர்களுக்கு எவிக்‌ஷன் ஃப்ரீ பாஸ் உள்ள நிலையில் 15 போட்டியாளர்களும் இந்த வாரம் நாமினேஷனில் இடம் பெற்றுள்ளனர்.

இதன் காரணமாக போட்டியாளர்கள் ஒவ்வொரும் தங்களது விளையாட்டில் அதிக அளவில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த 8-வது வாரமும் பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் இரண்டு அணிகளாக பிரிந்து விளையாடி வருகின்றனர். அதில் கௌ பாய்ஸ் அணியினர் அதிக அளவில் வெற்றியை சந்தித்து வரும் நிலையில் மைனிங் மாஃபியா தோல்வியையே சந்தித்து வருகின்றனர்.

பிக்பாஸில் புது புது டாஸ்குகளை களமிறக்கும் டீம்:

இந்த நிலையில் இன்று பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இன்று 53-வது நாளிற்கான முதல் புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. அதில் இன்று சிந்தாமல் என்ற ஒரு டாஸ்க் நடைபெறுகின்றது. முன்னதாக அதிக அளவில் டாஸ்குகளை வென்ற கௌ பாய்ஸ் அணியினர் வெற்றி பெறுவார்களா அல்லது மைனிங் மாஃபியா வெற்றியே பெறாத நிலையில் அவர்கள் வெற்றிப் பெறுவார்களா இல்லையா என்பது இன்றைய எபிசோடைப் பார்க்கும் போதே தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read… ஜெயிலர் 2 படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தர்மன் படத்தில் இணையும் நடிகர் நமோ நாராயணா?

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… யோகி பாபுவின் 300-வது படம்… அர்ஜுனன் பேர் பத்து படத்தின் ரிலீஸ் எப்போது? வெளியானது அப்டேட்!

Follow Us