AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பிக்பாஸில் ஜாலி டாஸ்க் இப்போ சண்டையா போகுது… கடுப்பாகும் பார்வையாளர்கள்!

Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் தொடர்ந்து டாஸ்குகள் வழங்கப்பட்டு விறுவிறுப்பாக சென்று வருகின்றது. இந்த நிலையில் இந்த வாரத்திற்கான டாஸ்க் தற்போது மிகவும் கலேபராமாக சென்று கொண்டு இருப்பது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பிக்பாஸில் ஜாலி டாஸ்க் இப்போ சண்டையா போகுது… கடுப்பாகும் பார்வையாளர்கள்!
பிக்பாஸ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 28 Oct 2026 13:29 PM IST

தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெறும் நிகழ்ச்சியாக உள்ளது பிக்பாஸ் தமிழ் சீசன் 10 (Bigg Boss Tamil Season 10). இந்த நிகழ்ச்சியில் வைல்கார்ட் போட்டியாளர்களுடன் இணைந்து மொத்தம் 24 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர். இந்த நிலையில் தற்போது 9 போட்டியாளர்கள் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நிலையில் தற்போது 15 போட்டியாளர்கள் மட்டுமே போட்டியில் உள்ளனர். இந்த நிலையில் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இந்த 8-வது வாரத்தில் வீட்டில் உள்ள 15 போட்டியாளர்களும் எவிக்‌ஷனுக்காக நாமினேஷனில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வார இறுதியில் யார் வெளியேறுவார்கள் என்பது அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் 8-வது வாரத்திற்கான டாஸ்க் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அதன்படி இந்த 8-வது வாரம் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் கௌபாய் மற்றும் மைனிங் மாஃபியா என்ற டாஸ்க் நடைபெறுகின்றது. இந்த டாஸ்கிற்காக போட்டியாளர்கள் இரண்டு அணிகளாக பிரிந்து விளையாடுகின்றனர். நேற்று இந்த டாஸ்க் தொடங்கியதில் இருந்து தொடர்ந்து சண்டையும் நடைப்பெற்று வருகின்றது.

பிக்பாஸில் ஜாலி டாஸ்க் இப்போ சண்டையா போகுது:

இந்த நிலையில் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இன்றைய நாளிற்கான இரண்டாவது புரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் பிக்பாஸ் போட்டியில் கௌபாய் டீம் மற்றும் மைனிங் மாஃபியா இரண்டு அணிகளுக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. ஜாலியாக தொடங்கிய இந்த டாஸ்கில் தற்போது தொடர்ந்து சண்டையை போடுகிறார்கள் போட்டியாளர்கள். இதன் காரணமாக தற்போது வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் ரசிகர்களிடையே அதிக அளவில் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… தீபாவளியை முன்னிட்டு ஓடிடியில் வெளியாகும் மீசைய முறுக்கு 2… உற்சாகத்தில் ரசிகர்கள்!

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… 46 படங்கள் நடிச்சு இருக்கேன்… ஆனா சீன் படத்திற்குதான் எனக்கு பயமா இருக்குனு சூர்யா சார் சொன்னார் – இயக்குநர் ஓபன் டாக்!

Follow Us