கடும் நெடும் பயணங்கள்… டோரதி படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட கார்த்திக் சுப்பராஜ்
Dorothy Movie Making Video | தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் டோரதி. இந்தப் படத்தின் மேக்கிங் வீடியோவை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தற்போது வெளியிட்டுள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் (Director Karthik Subbaraj). இவரது இயக்கத்தில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து தமிழ் சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி தென்னிந்திய மொழிகளில் உள்ள ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பிசியான இயக்குநராக வலம் வரும் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் எழுதி இயக்கி சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான படம் டோரதி. இந்தப் படம் 25-ம் தேதி செப்டம்பர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான நிலையில் படத்தினைப் பார்த்த ரசிகர்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படத்தில் நடித்த நடிகர்களின் நடிப்பையும் ரசிகர்கள் வெகுவாகப் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் இந்த டோரதி படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தார். மேலும் நடிகர்கள் ரிஷிகாந்த் மற்றும் சனந்த் இருவரை சுற்றிதான் படத்தின் கதை செல்லும். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.




டோரதி படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட கார்த்திக் சுப்பராஜ்:
ஆணாக பிறந்த ஒருவர் தனக்குள் இருக்கும் பெண்மையை உணர்ந்து திருநங்கையாக மாறுவது எப்படி என்பது குறித்து இந்தப் படம் பேசி உள்ளது. இந்தப் படம் தற்போது ஓடிடியில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வரும் நிலையில் தற்போது படத்தின் இயக்குநர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் டோரதி படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… மலையாள இயக்குநருடன்.. நடிகர் ஜீவாவின் 49வது படத்தின் ஷூட்டிங் பூஜைகளுடன் தொடக்கம்!
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:
கடும் நெடும் பயணங்கள்… !!
Here’s making of Long Gruelling Journey..
Thank you audience for pouring in overwhelming Love to #Dorothy … 🙏🏻🙏🏻
It keeps coming… and we are feeling blessed.. ❤️❤️
#DorothyWinsBIG in Theatres & Netflix 💥💥
#DorothyTheCinemaTheChange https://t.co/FKSQY5sh1n— karthik subbaraj (@karthiksubbaraj) October 28, 2026
Also Read… டிடிஎஃப் வாசனின் மாஸ்டர் ப்ளான்… சூடு பிடிக்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி!