12 வருசத்திற்கு பிறகு மீண்டும் தமிழ் படம்… நஸ்ரியா சொன்ன விசயம் – வைரலாகும் வீடியோ
Actress Nazriya Nazim | மலையாள சினிமாவில் உச்ச நடிகையாக வலம் வருபவர் நடிகை நஸ்ரியா நசீம். இவர் அவ்வபோது தென்னிந்திய மொழிகளில் நடித்து வரும் இவர் அடுத்ததாக தமிழ் மொழியில் வெளியாக உள்ள படம் குறித்து வெளிப்படையாக பேசியது வைரலாகி வருகின்றது.
மலையாள சினிமாவில் கடந்த 2006-ம் ஆண்டு முதல் குழந்தை நட்சத்திரமாக தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கினார் நடிகை நஸ்ரியா நசீம் (Nazriya Nazim). அதற்கு முன்னதாக அவர் சின்னத்திரையில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். குழந்தையாக இருக்கும் போதே அவர் நிகழ்ச்சி தொகுத்து வழங்கியது கேரள மக்களிடையே வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து இவர் குழந்தை நட்சத்திரமாக படங்களில் நடித்து வந்த நிலையில் பிறகு கடந்த 2013-ம் ஆண்டு முதல் சினிமாவில் நாயகியாக நடிக்கத் தொடங்கினார். தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாளம் என இரண்டு மொழிகளிகளிலும் ஒரே நேரத்தில் உருவான நேரம் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே அறிமுகம் ஆனார் நடிகை நஸ்ரியா நசீம். இந்தப் படம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே அதிக அளவில் கவனத்தை ஈர்த்தது மட்டும் இன்றி நஸ்ரியாவிற்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்ததும் குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து மலையாள சினிமாவில் அதிக அளவில் கவனத்தை செலுத்தி வந்த நிலையில் அவ்வபோது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் படங்களில் நடிப்பதை கவனம் செலுத்தி வந்தார். தொடர்ந்து பிசியான நடிகையாக வலம் வந்த நடிகை நஸ்ரியா நசீம் திருமணத்திற்கு பிறகு நடிப்பதில் இருந்து சிறிது காலம் ப்ரேக் எடுத்துவிட்டு மீண்டும் நடிக்கத் தொடங்கினார்.
12 வருசத்திற்கு பிறகு மீண்டும் தமிழ் படம்… நஸ்ரியா சொன்ன விசயம்:
இந்த நிலையில் நடிகை நஸ்ரியா நசீம் நடிப்பில் அடுத்ததாக தமிழ் மொழியில் வெளியாக உள்ள படம் சீன். இயக்குநர் ஜித்து மாதவன் எழுதி இயக்கிய இந்தப் படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை நஸ்ரியா நசீம் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் நிகழ்ச்சி ஒன்று துபாயில் நேற்று நடைப்பெற்ற நிலையில் அதில் நஸ்ரியா பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அதில் அவர் பேசியதாவது, மீண்டும் இங்கு வருவது எனக்கு எப்போதும் மகிழ்ச்சி அளிக்கிறது. நான் துபாயில்தான் கல்வி பயின்றேன். 12 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு தமிழ் திரைப்படத்தில் நடிக்கிறேன். என் மீது நம்பிக்கை வைத்த ஜித்துவுக்கு நன்றி. இந்தத் திரைப்படத்தை உருவாக்கும் பயணம் மிகவும் அற்புதமான அனுபவமாக இருந்தது. சூர்யா சார் மற்றும் நாஸ்லெனுக்கு நன்றி. நவம்பர் 6-ஆம் தேதி வெளியாகும் சீன் திரைப்படத்தைப் பாருங்கள், இது ஒரு அட்டகாசமான படம்! திரையரங்குகளில் நீங்கள் அனைவரும் வயிறு குலுங்கச் சிரிக்கப்போகிறீர்கள் என்று தெரிவித்துள்ளார்.
Also Read… Nayanthara: அதனால்தான் எனக்கு பிரச்சனையே.. நயன்தாரா பகிர்ந்த விஷயம்!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#Nazriya:
“I’m always happy to come back home, I have studied here in Dubai. After 12 Yrs I’m doing a tamil film. Thanks to Jithu for trusting me, this process was the so amazing journey I have gone through🤞. Thanks Suriya sir and Naslen. Watch #Scene on Nov 6th, it’s Adipoli film. You will all have hilarious laughing moment in theatres😁”— AmuthaBharathi (@CinemaWithAB) October 25, 2026
Also Read… காலமானார் செஃப் தாமு… யார் இந்த சமையல் கலைஞர் – சமையல் துறையில் ஜொலித்தது எப்படி?



