AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தர்மன் படத்தில் நயன்தாரா இருப்பதை உறுதி செய்த படக்குழு – வைரலாகும் பதிவு

Nayanthara in Dharman movie | தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வரும் நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்துள்ளது குறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

தர்மன் படத்தில் நயன்தாரா இருப்பதை உறுதி செய்த படக்குழு – வைரலாகும் பதிவு
தர்மன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 25 Oct 2026 17:08 PM IST

மலையாள சினிமாவில் நடிகையாக தனது சினிமா பயணத்தை தொடங்கியவர் நடிகை நயன்தாரா (Nayanthara). தொடர்ந்து மலையாள மொழியில் படங்களில் நடித்து வந்த அவர் பிறகு தமிழ் சினிமாவில் ஐயா படத்தின் மூலம் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார். தொடர்ந்து இவர் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆன முதல் படமே ரசிகர்ளிடையே அதிக அளவில் கவனத்தை ஈர்த்தது. அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்கத் தொடங்கினார் நடிகை நயன்தாரா. தொடர்ந்து மலையாளம் மற்றும் தமிழ் மொழிகளில் பிசியாக நடித்து வந்த நடிகை பிறகு தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளிலும் தற்போது படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பிசியான நடிகையாக வலம் வரும் நடிகை நயன்தாரா நடிப்பில் இறுதியாக ஹாய் படம் தமிழ் சினிமாவில் வெளியானது.

அதனைத் தொடர்ந்து தற்போது நடிகை நயன்தாரா நடிப்பில் தமிழ் சினிமாவில் மூக்குத்தி அம்மன் 2 படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதன்படி இந்த மூக்குத்தி அம்மன் 2 படம் வருகின்ற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 06-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும் இந்தப் படத்தை தொடர்ந்து நடிகை நயன்தாரா அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.

தர்மன் படத்தில் நயன்தாரா இருப்பதை உறுதி செய்த படக்குழு:

அதன்படி நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் தர்மன். ரஜினிகாந்தி 173-வது படமாக உருவாகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கி தொடர்ந்து விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இந்தப் படத்தை எழுதி இயக்கி உள்ள நிலையில் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக நடிகை நயன்தாரா தர்மன் படத்தில் இணைந்து நடிப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தது. இந்த தகவலை உறுதி செய்யும் விதமாக தர்மன் படக்குழு நயன்தாரா கண்களின் புகைப்படத்தை வெளியிட்டு இன்று மாலை 7 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… பிக்பாஸில் ஜேசன் மாதிரியே கத்திக்காட்டிய ரம்யா கிருஷ்ணன் – வைரலாகும் வீடியோ

தர்மன் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… ஃப்ரேம் பாருங்க ஜி… ஏ.ஆர்.ரஹ்மான் உடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட அனிருத் – வைரலாகும் போட்டோ

Follow Us